இந்திய கொடி நாள்
வருடத்தின் 365 நாட்களும் ஏதேனும் ஒரு சிறப்பை தாங்கியே நிற்கிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறது. நாம் முன்னோர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை நினைவு கூறவும், அவர்களின் பெருமைகளை பேசவும் நமக்கு நேரம் இல்லை அதை நினைவு கூர்ந்தால் வாழ்க்கையில் அவர்கள் அடைந்த வெற்றிக்கான படிகள் நமக்கு வெளிச்சமாகும். ஆனால் அதனை நாம் செய்வது இல்லை ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் அதனை நாம் நினைவு கூறுகின்றோம். அப்படி நாம் முன்னோர்களின் தியாகங்கள் போற்றும் ஒரு நாளாகவும், இந்திய திருநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைகளில் இருந்து பாதுகாக்கும் ஒவ்வொரு வீரனின் நலனில் நம்மால் முடிந்த சிறு பங்களிப்பை வழங்க கொண்டாடப்படும் ஒரு நாள் தான் கொடி நாள். இன்றைய நாளில் நம்மால் முடிந்த உதவிகளை இந்திய முப்படை வீரர்களுக்கு வழங்குவோம். இன்றைய பதிவில் இந்திய கொடி நாளின் சிறப்பையும் அதன் மேன்மையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Armed forces flag day in tamil:
கொடி நாள் என்பது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய விழாவாகும். இந்த நாள் முப்படைகளின் வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை நினைவுகூர்ந்து, அவர்களின் நலனுக்காக நிதி திரட்டும் ஒரு நாளாகும்.
கொடி நாள் வரலாறு:
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி, இந்திய அரசாங்கம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் கொடி நாள் நிதியம் தொடங்கப்பட்டது.
கொடி நாள் கொண்டாட்டம்:
கொடி நாள் ( Armed forces flag day) அன்று, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெறுகின்றன. தேசியக் கொடி ஏற்றுதல், இராணுவ வீரர்களுக்கான அணிவகுப்பு, இராணுவ பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். இவை முப்படைகளின் வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் அமையும்.
கொடி நாள் நிதி:
கொடி நாள் நிதியானது, முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் ஊனமுற்றோர், போரில் காயமடைந்தோர், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதி மூலம், அவர்களின் கல்வி உதவி, மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்கு உதவியாக வழங்கப்படுகிறது.
கொடி நாள் பங்களிப்பு:
கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் முப்படைகளின் வீரர்களின் நலனுக்கு பயன்படும். பொதுமக்கள் கொடி நாள் நிதியை கொடி நாள் நிதிபெட்டியில் நன்கொடை அளிக்கலாம், இணையதளம் மூலம் கொடி நாள் நிதி நன்கொடை செலுத்தலாம். இராணுவ வீரர்களுக்கான நல அமைப்பு மூலம் நன்கொடை வழங்கலாம்.
கொடி நாள் முக்கியத்துவம்:
கொடி நாள் என்பது நமது திரு நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த முப்படை வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை மற்றும் நன்றியின் அடையாளமாகும். இந்த நாள் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் நலனுக்காக நாம் நாம்மால் முடிந்த பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற உணர்வை தூண்டும் நாளாக அமைகிறது.
மூவர்ண கொடியின் சிறப்பு | Desiya Kodi Sirappu in Tamil
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |