‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Arpanuku Vazhvu Vanthal Palamozhi Vilakkam | அற்பனுக்கு வாழ்வு வந்தால்

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ இந்த பழமொழியை நாம் புத்தகத்தில் படித்திருப்போம். சிலர் கேலியாக கூறி கேட்டிருப்போம். இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா..?

பழமொழி விளக்கம் | Arpanuku Vazhvu Vanthal Meaning:

Arpanuku Vazhvu Vanthal Palamozhi

நாம் சிறு வயதில் இருந்தே சில பழமொழிகளை படித்திருப்போம். அதை மற்றவர்கள் கூறி கேட்டிருப்போம். பழமொழிகளை கேட்பதற்கு சுவாரஸ்யமானதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும்.

ஆனால் நாம் யாரும் அந்த பழமொழிக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள மாட்டோம். ஆனால் பழமொழிகள் அனைத்திற்கு பின்னாலும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கிறது.

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” இந்த பழமொழியை நாம் மற்றவர்கள் கூறி கேட்டிருப்போம். சில சமயங்களில் நாம் கூட இந்த பழமொழியை கூறியிருப்போம்.

அந்த காலத்தில் மழை பெய்தால் ஒரே நாள் இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்” என்று சொல்வார்கள். அப்படி ஒருநாள் மழையில் முளைத்த காளான்கள் சீக்கிரம் அழிந்து விடும். அப்படி அழியும் காளான்களை தான் அற்பன் என்று சொல்வார்கள்.

இந்த காளான்கள் பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அதனால் இதை குடைக்காளான் என்று சொல்வார்கள். இந்த காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது.

 சீக்கிரமாக அழிந்துவிடும் அற்பன் என்ற காளானுக்கு வாழ்வு வந்தால் அது இரவில் முளைக்கும் அதை தான் ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ என்று சொல்கிறோம்.  

இந்த சொல் அந்த காலத்தில் விடுகதையாக இருந்தது. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் அவன் யார்..? என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இது பழமொழியாக மாறிவிட்டது.

“வெறும் கையில் முழம் போடுவது” என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement