சாம்பல் பூசணிக்காய் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்

ash gourd in tamil

Ash Gourd in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சாம்பல் பூசணிக்காய் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். நம்முடைய சமையலில் பலவகையான காய்கறிகள் சேர்த்து கொள்வது வழக்கம். அந்த காய்கறி வகைகளில் சாம்பல் பூசணிக்காயும் ஒன்று. இந்த பூசணிக்காய் குறைந்த அளவு கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த பூசணிக்காயில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் சாப்பாட்டில் இந்த சாம்பல் பூசணிக்காயையும் சேர்த்து சாப்பிடும் போது அது உங்களுக்கு சாப்பாட்டை எளிதில் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. மேலும் சில தகவல்களை தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

சாம்பல் பூசணிக்காய் பற்றிய தகவல்:

சாம்பல் பூசணி சாகுபடி

சாப்பாட்டிற்கு மற்றும் உடலுக்கு மருந்தாகவும் பயன்படக்கூடிய இந்த சாம்பல் பூசணியானது மெழுகு சுரைக்காய் மற்றும் பெனின்காசா ஹிஸ்பிடா என்றும் அழைக்கப்படுகிறது.

பூசணிக்காய் கொடியில் முதல் முதலாக காய் வைக்கும் பருவத்தில் அதன் மீது  மெலிதான முடிகளால் மூடப்பட்டு வெள்ளை நிறத்தில் காணப்படும். அதன் பிறகு பருவம் முழுவடைந்ததும் முடிகள் அனைத்தும் உதிர்ந்து மெழுகு நிறத்தில் காணப்படுகிறது.

மெழுகு நிறத்தில் இதனுடைய தோற்றம் காணப்படுவதால் இந்த பூசணிக்காயின்  ஆயுள் காலம் 1 வருடம் ஆகும்.

இந்த சாம்பல் பூசணிக்காய் முதலில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகளவு விளைவிக்கப்பட்டது.

சாம்பல் பூசணி சாகுபடி முறை:

இந்த சாம்பல் பூசணியானது மிதமான காலநிலையில் உள்ள களிமண் மற்றும் மணல் ஆகியவற்றில் விளைவிக்கப்படுகிறது.

மேலும் இந்த காயானது பள்ளங்கள் மற்றும் ஆற்று ஓரங்களில் வளர்க்கப்படுகிறது. இந்த காயிற்கு சரியான பருவங்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அப்போது தான் விளைச்சல் நன்றாக இருக்கும்.

அத்தகைய பூசணிக்காயானது உறைபணியை தாங்கி கொள்ளும் பண்பு கிடையாது.

கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

சாம்பல் பூசணி பயன்கள்:

தினமும் காலையில் இந்த பூசணிக்காய் ஜூஸ் குடிக்கும் போது கண் பார்வைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒரு வாரம் தொடர்ந்து 1 டம்ளர் இந்த சாம்பல் பூசணி ஜூஸ் குடிப்பது உங்களுடைய மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த சாம்பல் பூசணி ஜூஸை குடிக்கும் போது அதில் உள்ள நுண்ணுட்ட சத்துக்கள் உங்களை அந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வரச்செய்கிறது.

உங்களின் உடல் சூட்டை குறைப்பதற்கும் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கும்  சரியான மருந்தாக சாம்பல் பூசணி இருக்கிறது.

சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துவதற்கும் அதில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் இந்த சாம்பல் பூசணி நல்ல பலனை தருகிறது.

வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இந்த பூசணி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் செய்கிறது.

அதுபோல இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.

உடலில் கட்டிகள் ஏதும் இருந்தாலும் கூட இந்த சாம்பல் பூசணி ஜூஸ் குடிப்பதன் மூலம் கட்டிகள் விரைவில் குணமடையவும் பயன்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com