ஆசிரியர் பற்றிய திருக்குறள்
இந்த உலகில் பிறந்த நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எண்ணற்ற பணிகள் இருக்கிறது. அத்தகைய பணிகளை காட்டிலும் ஆசிரியர் பணி மற்றும் மருத்துவர் பணி இந்த இரண்டும் மக்கள் அனைவரும் பெருமிதமாக பேசப்பட்டு முதல் இடத்தில் வைக்கும் இடத்தில் இடம் பெற்று இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் ஆசிரியர் பணி என்பது ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை கல்வியினை மட்டும் அளிக்காமல் வாழ்க்கைக்கு தேவையான பொறுமை, சகிப்புத்தன்மை, போராடும் குணம், சகிப்புத்தன்மை போன்ற பல வகையான பண்புகளை கற்று தருகிறார்கள். இவர்களை போற்ற கூடிய வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி என்று பல போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஆசிரியர் தினம் பற்றிய திருக்குறள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஆசிரியர் பற்றிய திருக்குறள்:
தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தருக்கு
கற்றனை தூறும் அறிவு
ஆற்று மணலை தோண்ட தோண்ட எப்படி நீர் பெறுகிறதோ அது போல படிக்க படிக்க அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது தான் இதனுடைய அர்த்தமாக இருக்கிறது.
இன்னொரு அர்த்தமாக நீங்களே கல்வியை நீங்களே கற்று கொள்ளாவிட்டால் கற்று கொண்டவர்களிடமாவது அறிவை பெற்று கொள்ள வேண்டும்.
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்..!
திருக்குறளில் ஆசிரியரை பறி கூறவில்லை ஏன்?
திருக்குறளில் வாழ்க்கையை பற்றி கல்வியை பற்றி பலமுறையில் குறள் வகுத்துள்ளார். ஆனால் ஆசிரியரை பற்றி மட்டும் கூறவில்லை. ஆனால் திருக்குறளில் யார் யாரெல்லாம் அறிவை பெற்றுள்ளார்களோ அவர்களிடமிருந்து நாமும் பெற்று கொள்ள வேண்டும் என்று பொதுவாக கூறியிருக்கிறது.
மனிதன், இயற்கை, சமூகம், உயிரினங்கள் போன்ற பலவகையை பற்றி திருக்குறளில் கூறியுள்ளது. இதில் ஒவ்வோர் பிரிவிலும் ஒவ்வொரு ஆசிரியரை பார்க்கலாம். இதிலையே பல வகையான ஆசிரியர்களை பற்றி கூறியிருக்கிறார். அதனால் தனியாக ஆசிரியரை பற்றி கூறவில்லை.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |










