ஜோதிடம் என்றால் என்ன அவற்றை பற்றிய சில தகவல்கள்.

astrolgy meaning in tamil

ஜோதிடம் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் Astrology என்றால் என்ன அவற்றின் அர்த்தகளையும், அவற்றை பற்றிய சில தகவல்களை நம் பதிவில் காணலாம். இன்று பலரும் அதிகமாக விரும்புவதில் ஜோதிடமும் ஒன்றாகும். பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஜோதியிடங்களை பார்த்துதான், நல்ல விஷயங்களை செய்வார்கள், ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் ஆவதற்கும், குழந்தைகள் பிறப்பதற்கு, அவர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ போகிறார்கள் என்றும் ஜோதிடம் கணிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஜோதிடம் என்றால் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

ஆன்மிகம் என்றால் என்ன? அதை பற்றிய சில தகவல்கள்

Astrolgy Meaning in Tamil:

  • ஜோதிடம்
  • சோதிடம்
  • ஐந்திரம்
  • சோதிடசாஸ்திரம் 
  • சோதிடகலை
  • கணிப்பியல்
  • கணிதசாஸ்திரம்
  • ஜோஸ்யம்
  • சோதிடம் என்ற வார்த்தையானது கிரேக்க சொல்லில் இருந்து பிறந்தவையாகும். சோதிடம் என்பதற்கு கிரேக்க மொழியில் நட்சத்திரத்தின் கணக்கு என்று பொருள் ஆகும்.
  • சோதிடமானது  பன்னிரெண்டு ராசி நட்சத்திரங்களுக்கும் அடங்கிய சோதிட கணிப்பு முறையாகும்.

ஜோதிடம் என்றால் என்ன?

ஜோதிடம் என்பது கோள்களின்  நகர்வுகளை அடிப்படியாக கொண்டு, பலரின் எதிர் காலங்களை கணிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டவையாகும். ஜோதிடம்  வேதத்தில் ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது. இவை வேதங்களின் கண்களாக கருதப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஜோதிடமானது கணிதத்தின் அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. அவை சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம் போன்றவையாகும்.

வான உடல்களின் இயக்கம் மற்றும் உறவுகள் பற்றிய நிலை, மனித விவரங்கள் பற்றிய ஆய்வு போன்றவற்றை கணிக்க கூடியவையாகும்.

அதுமட்டுமின்றி கிரகங்கள், சூரியன், சந்திரன் போன்றவற்றின் கணிப்பை அறியும் போலியான ஜோதிடம் என்றும் சொல்லப்படுகிறது. ஜோதிடர்களுக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படைகளும் இல்லை.

ஜோதிடம் என்னும் சொல்லானது சம்ஸ்கிருதத்தில் ஜீயோடிஸ் (Jyótis) என்பதில் இருந்து பிறந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

இந்திய சோதிடமானது இந்து சோதிடம் என்றும் வேத சோதிடம் என்றும் அழைக்கப்டுகிறது.

இந்த சோதிட முறையானது ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்நேரத்தை பொறுத்து நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு அந்த குழந்தைக்கு ராசியும், நட்சத்திரமும் லக்கனமாக வைக்கப்படுகிறது.

இந்த கால கணிப்பு முறையால் உருவானது தான் பஞ்சாங்கம் ஆகும். இந்த பஞ்சாங்கத்தை கொண்டுதான் ஒருவரின் ஜாதகத்தில் பலன்கள் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கமானது ஐந்து உறுப்புகளை கொண்டுள்ளது அதாவது வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் போன்றவையாகும். இவற்றை கொண்டு அமைவது தான் ஜோதிடம் எனப்படுகிறது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil