அத்திமரத்தில் இவ்ளோ நன்மைகளா தெரியாம போச்சே..!

Advertisement

Athi Maram Uses in Tamil

நமக்கு தெரிந்த தென்னை மரம், பனை மரம், மா மரம், கொய்யா மரம் இதுபோன்ற மரங்களின் வரிசையில் அத்தி மரமும் ஒன்று. அத்தகைய அத்திமரத்தின் பயன்கள் என்ன என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். பண்டைய காலத்தில் அத்தி மரத்தை அதவம் என்று அழைப்பார்கள். மற்ற பழங்களை விட அத்தி மரத்தில் காய்கின்ற பழத்தில் நான்கு மடங்கு அதிகமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் அத்தி மரத்தின் பயன்கள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..! அப்போ அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

அத்தி மரம்:

அத்தி மரத்தின் பட்டைகள் சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கலந்து காணப்படும். இதனுடைய கிளையில் அத்தி காய்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். அதன் பிறகு காய்கள் பழுத்த பிறகு சப்போட்டா வடிவில் பெரியதாக இருக்கும்.

அத்தி மரம் 10 மீட்டர் வரை நீளமாக வளரக்கூடிய தன்மை கொண்டது. இத்தகைய  அத்தி மரம் களிமண் மற்றும் ஆற்றுப்படுகையில் வளர்கின்றன.

அத்திமரங்கள் மூன்று வகைப்படும்.

  1. வெள்ளை அத்தி 
  2. நாட்டு அத்தி 
  3. நல்ல அத்தி

அத்தி மரத்தின் பயன்கள்:

அத்தி மரத்தின் பயன்கள்

அத்திமரத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.

தொண்டை புண் உள்ளவர்கள் அத்திமரத்தின் பட்டையில் இருந்து சாறு பிழிந்து அதனுடன் 1 ஸ்பூன் மோர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரை நோய் முழுவதுமாக குணமடையும்.

அதேபோல இந்த மரத்தின் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரால் உடம்பில் இருக்கும் காயத்தை கழுவினால் காயம் ஆறிவிடும். 

அத்திக்காய்:

அத்திக்காய்

அத்திக்காயில் வைட்டமின் A, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புசத்து அதிகளவு இருக்கிறது.

அத்திக்காயை காயவைத்து அதன் பிறகு அதனை பொடியாக தயார் செய்து 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களுக்கு விரைவில் நல்ல பலனை தரும். 

வாய் புண், வாதம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று புண் ஆகிய பிரச்சனைக்கு அத்திக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அத்தி பால்:

அத்திப்பால்

அத்திப்பாலை வீக்கம் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண் ஆகிய இடங்களில் தடவினால் நன்மையை தரும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெல்லம் கலந்து காலை, மாலை இரண்டு வேளை குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

அத்திப்பழம் நன்மைகள்:

அத்திப்பழம் நன்மைகள்

 அத்திப்பழம் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஆகிய சத்துக்களை கொண்டது.  

அத்திப்பழம் நாம் தினமும் சாப்பிடுவதால் அது உடலில் உள்ள இரத்தத்தை அதிகரிக்க செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடல் சுறுசுறுப்பாக இருக்கவும் அத்திப்பழம் பயன்படுகிறது.

அத்திப்பழம் சாப்பிட்டால் செரிமான கோளாறு பிரச்சனை வராது.

கண்ணில் கருவளையம் இருந்தால் அத்திப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக நறுக்கி தனித்தனியாக கண்களிலில் 10 நிமிடம் வைத்தால் கருவளையம் மறைந்துவிடும்.

வெந்தக்கீரையுடன் அத்திப்பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவினால் கட்டிகள் உடைந்து விடும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement