ஆட்டிசம் என்றால் என்ன.?

Advertisement

Autism Meaning in Tamil | ஆட்டிசம் என்றால் என்ன.? 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆட்டிசம் என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆட்டிசம் என்று பலபேர் கூறி கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் ஆட்டிசம் என்றால் என்ன.? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.

ஆட்டிசம் என்பது ஒரு விதமான குறைபாடு ஆகும். இது பெரும்பாலும் குழந்தைங்களுக்கு ஏற்படுகிறது. ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், குடிப்பழக்கம், குழந்தை கருவில் இருக்கும்போதும், பிரசவத்தின்போது கழுத்தில் கொடி சுற்றி கொள்ளுதல், குழந்தை பிறந்தவுடன் அழாமல் இருப்பது, மரபு ரீதியான காரணங்கள் போன்றவற்றால் ஆட்டிசம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஆட்டிசம் என்றால் என்ன.? 

ஆட்டிசம் என்றால் என்ன

ஆட்டிசம் என்பது, நோயல்ல ஒரு குறைபாடு என்று கூறப்படுகிறது. அதாவது, ஆட்டிசம் என்பது ஒரு வகையான மூளை வளர்ச்சி குறைபாடு ஆகும். ஆட்டிசம் ஏற்பட்டால், நடத்தை மற்றும் பிறருடன் தொடர்பு கொள்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வழக்கமான நடத்தை போல் இல்லாமல், அவர்கள் செய்வது வித்தியாசமானதாக இருக்கும். அக்குழந்தைகள் செய்ததையே திரும்ப திரும்ப செய்வார்கள். இது பெருமைப்பிலும் குழந்தையிடம் ஏற்படுகிறது. நாட்டில் பிறக்கும் 500 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டுடன் தான் பிறக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே ஆட்டிசம் குறைப்பாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ADHD என்றால் என்ன.? இந்த நோய் வருவதற்கான காரணம்

ஆட்டிசத்தின் அறிகுறிகள்:

குழந்தைகளில் ஓன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளிடம் ஆட்டிசத்தின் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். மூன்று வயதை தாண்டிய பிறகு, குழந்தைகளிடம் ஆட்டிசத்தின் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். ஆட்டிசத்தின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஒரே மாதிரியான செயல்களை/ நடவடிக்கைளை திரும்ப திரும்ப செய்தல்.
  • பிறரிடம் உரையாடுவதில் சிரமப்படுதல்.
  • கைகளை தட்டி சுட்டி காட்டுதல்.
  • தினமும் ஒரே விதமான உணவையே விரும்புவது.
  • பெயர் சொல்லி அழைத்தாலும் சாய்க்காமல் இருப்பது.
  • தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படுதல்.

இதுபோன்ற அறிகுறிகள் ஆட்டிசத்திற்கான அறிகுறிகள் ஆகும்.

ஆட்டிசத்தின் சிகிச்சை முறைகள்:

ஆட்டிசத்தை குறைப்பதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளது. ஆனால், அதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. ஆட்டிசம் அறிகுறிகளின் தீவிரத்தை குறைத்து ஓரளவிற்கு இயல்பான வாழக்கையை அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர், குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையின்படி  ஸ்பீச் தெரபி, Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் மூலம் ஆட்டிசத்தின் அறிகுறிகளை குறைக்க முடியும்.

ஆட்டிசம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்…!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement