Ayyappa dress code rules in tamil
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொள்ளும் போது கருப்பு, நீலம், பச்சை, காவி நிறங்களை உடைகளை அணிந்துகொள்வார்கள். அதற்கு காரணம் உள்ளது. அந்த ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. மாலை அணிந்துகொள்ளும் போதே அவர்களுடைய குருசாமி எந்த நிறம் அணிய வேண்டும் என்பதை கூறுவார்கள். சரி இப்பொழுது நாம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொள்ளும் போது ஐயப்ப பக்தர்கள் கருப்பு, நீலம், பச்சை, காவி நிறம் உடை அணிவதன் அர்த்தங்களை படித்தறியலாம் வாங்க.
கருப்பு நிறம்:-
குழந்தை மற்றும் கன்னி சாமிகள் அணிய வேண்டும். ஏன் என்றால் இவர்களுடைய மனம் இப்பொழுது இருளில் தான் இருக்கும் ஜோதியில் உருவான அந்த ஜப்பானை அவர்கள் இன்னும் பார்க்கவில்லை. ஆக அவர்கள் கருப்பு நிறத்தில் தான் உடை அணிந்துகொள்ள வேண்டும்.
நீலம் நிறம்:-
சில ஆண்டுகள் சபரிமலை சென்று ஐயப்பனின் அருளை வாங்கிய திருமணம் ஆகாத பக்தர்கள் மட்டும் அணிய வேண்டும்.
பச்சை நிறம்:-
பச்சை நிறம் உடை இல்லற வாழ்வில் உள்ள பக்தர்கள் ஐயப்பனை மனதில் நினைத்து அவர்களுக்கு மாலை அனைத்து விரதம் இருக்கும் போது அணிய வேண்டியது.
காவி நிறம்:-
இந்த உலகில் உள்ள எல்லா சுக துக்கங்களையும் அனுபவித்து. இனி எனக்கு எதுவுமே வேண்டாம் அந்த ஐயப்பனை நான் முழுதாக சரணடைகிறேன் என்று இருக்கும் பக்தர்கள் அணிய வேண்டியது. அதாவது வயதில் மூத்த குருசாமி அணிய வேண்டியது.
தொடர்புடைய பதிவுகள் விருப்பம் இருந்தால் கிளிக் செய்து பாருங்கள் 👇
ஐயப்பனின் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் பாடல் வரிகள்..!
சபரிமலை ஐயப்பனின் ஸுப்ரபாதம் பாடல் வரிகள்..!
சபரிமலை ஐயப்பனின் திருப்புகழை சொல்லும் வில்லாளி வீரனே வீரமணிகண்டனே பாடல் வரிகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |