Bajaj Chetak Urbane 2024 Specifications in Tamil
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாக திகழும் பஜாஜ் நிறுவனம், இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பலவிதமான மாடல்களிலும் சூப்பரான அம்சங்களுடனும் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து bajaj chetak urbane ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ், அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் bajaj chetak urbane எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது, இதற்கு முன்னதாக உள்ள மாடலின் வடிவத்தை கொண்டுள்ளது. மேலும், இதன் விலையும் மாறுபட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bajaj Chetak Urbane 2024:
வடிவமைப்பு:
பஜாஜ் சேடக் அர்பன் ஸ்கூட்டர் ஆனது 134 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டு 4 வண்ணங்களில் வருகிறது. அதாவது, புரூக்ளின் பிளாக், சைபர் ஒயிட், இண்டிகோ மெட்டாலிக், மேட் சாம்பல் நிறம் ஆகிய நான்கு வகையான வண்ணங்களில் உள்ளது.
செயல்திறன்:
பஜாஜ் சேடக் அர்பன் ஸ்கூட்டர் ஆனது, குறைந்தபட்சம் 113 கிமீ முதல் அதிகபட்சம் 127 கிமீ வரை மைலேஜ் ரேஞ்சை கொண்டுள்ளது. அதாவது, இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 113 கிமீ வரை போகும். மேலும், இது மணிக்கு அதிகபட்சம் 73 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், இதன் 4200w பவரை கொண்டுள்ளது.
பட்ஜெட் விலையில மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..!
சார்ஜிங் நேரம்:
இந்த ஸ்கூட்டரை 3.15 மணி நேரத்தில் 80% சார்ஜிங் செய்யலாம். அதேநேரம் அதிகபட்சமாக 4.3 மணிநேரத்தில் முழு சார்ஜ் செய்கிறது.
விலை:
பஜாஜ் சேடக் அர்பன் ஸ்கூட்டரின் குறைந்தபட்ச விலை ரூ.1.15 லட்சமாகவும் அதிகபட்ச விலை ரூ. 1.23 லட்சமாகவும் உள்ளது.
எந்த ஸ்கூட்டர்களிலும் இல்லாத புதிய வசதிகளுடன் Suzuki access 125 disc alloy…
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |