வாழை இலையின் நடுவில் கோடு எப்படி வந்தது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Banana Leaf in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாலை மரம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுபோல இன்று இந்த பதிவின் மூலம் வாழை இலையின் நடுவில் கோடு எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வாழைக்கு ஏன் ‘வாழை’ என்று பெயர் வந்தது உங்களுக்கு தெரியுமா..?

வாழை இலையின் நடுவில் கோடு எப்படி வந்தது..? 

 banana leaf in tamil

வாழை நம் இந்தியாவை தாயகமாக கொண்ட ஒரு தாவரமாகும். இது உலகில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் இதுவும் ஓன்று. வாழை மரத்தை பற்றி நமக்கு தெரியும். வாழை மரத்தின் இலை முதல் காய், பழம், தண்டு மற்றும் பூ என்று அனைத்தும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை வாழை இலையில் சாப்பிடும் வழக்கம் இன்றும் பலருக்கு இருக்கிறது. என்னதான் இன்று பல பேப்பர் பிளேட் வந்தாலும் வாழை இலையின் மகத்துவம் என்றும் மாறாது. நாம் வாழை இலையில் சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

சரி வாழை இலையில் சாப்பிடும் போது நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? வாழை இலையின் நடுவில் கோடு இருக்கும். அந்த கோடு எப்படி வந்தது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும்.

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா…?

 

காரணம், புராண காலங்களில் இருந்த வாழை இலைகளின் நடுவில் கோடு கிடையாது. இராமாயண காலத்தில் இராமன் ஒரு வாழை இலையில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்தார்.

 banana leaf story in tamil

அப்போது அனுமனையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். அங்கு ஒரே ஒரு வாழை இலை மட்டும் தான் இருந்தது. அதனால் இராமர் அனுமனை தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடுமாறு கூறினார்.

 அந்த நேரம் இருவரும் வாழை இலையின் எதிரெதிர் திசையில் அமர்ந்திருந்தனர். அப்போது தான் இராமர் வாழை இலையின் நடுவில் தன் கைகளால் ஒரு கோடு கிழித்தார். பின் ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதேபோல அனுமன் இருந்த எதிர் பக்கத்தில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பழங்களும் பரிமாறப்பட்டன. 

அன்று அவர்கள் பரிமாறிய பழக்கம் தான் இன்று நம்முடைய பாரம்பரியமாக செயல்பட்டு வருகிறது. இது தான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement