Bank Locker Rules in Tamil
நாம் அனைவருக்குமே நமது பொருட்கள் மற்றும் செல்வங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் தங்களது வீடுகளிலேயே தங்களது செல்வங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மிகவும் பாதுகாப்பாக வைத்து பராமரித்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர்.
அப்படி மக்கள் தங்களது பொருட்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க உதவும் இடமாக கருதப்படும் வங்கி லாக்கரில் பொருட்கள் வைப்பது பற்றிய விதிமுறைகளை இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வங்கி லாக்கர் விதிகள்:
பொதுவாக வங்கிகள் வழங்கும் லாக்கரில் வாடிக்கையாளர் அவர் விரும்பு அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். தங்கம், வைரம், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பல பொருட்களை வைக்கலாம். ஆனால் பணத்தை மட்டும் லாக்கரில் வைக்க முடியாது.
வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வாடிக்கையாளர் மட்டுமே பொறுப்பு. லாக்கரில் பாதுகாப்படும் பொருட்களின் விவரங்கள் எதையும் வங்கி கேட்பதில்லை.
இந்த வங்கிகளில் உள்ள லாக்கர் சேவைக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த வாடகை ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும். அந்த வாடகை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும். இந்த வாடகை அனைத்து 6000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும் இந்த வங்கி லாக்கர் அறையில் சிசிடிவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அதேபோல் லாக்கரில் வைக்கப்படும் விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது தீ விபத்து, கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலோ, லாக்கருக்கான வங்கிக் கட்டணத்தை விட 100 மடங்கு வரை வங்கி வாடிக்கையாளர்கள் பெறலாம். உதாரணமாக நீங்கள் 4000 ரூபாய் வாடகை செலுத்துகிறீர்கள் என்றால் அப்பொழுது உங்களுக்கு 4,00,000 ரூபாய் கிடைக்கும்.
ஒரு நபர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வங்கி லக்கருக்கான வாடகையை செலுத்தவில்லை என்றால் அந்த லாக்கர் வங்கினால் உடைக்கப்படும்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |