பார்லி என்றால் வாற்கோதுமையா..? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Barley in Tamil

அன்பு வாசகர்களே..! இன்று நம் பதிவின் வாயிலாக பார்லி என்றால் என்ன..? அதன் பயன்கள் என்ன..? அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பற்றிய முழு விவரங்களையும் தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே பல நன்மைகளை கொண்டதாக இருக்கிறது.

அப்படி உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னவென்று தெரியும். ஆனால் அந்த உணவுகளின் வரலாறு நமக்கு அவ்வளவாக தெரியாது. ஆகவே நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு உணவுப்பொருட்களின் முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Barley in Tamil பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பனிவரகு தானியத்தை உணவில் சேர்க்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..

Barley in Tamil Name:

பார்லி என்பதன் தமிழ் பெயர் என்ன என்று பலரும் தேடி இருப்பீர்கள். ஆகவே இப்போது பார்லி என்பதன் தமிழ் பெயரை பற்றி பார்ப்போம்.

பார்லி Barley in Tamil Name என்பதன் தமிழ் பெயர்  வாற்கோதுமை  என்பதாகும்.

பார்லி என்றால் என்ன..? 

இந்த பார்லி என்பது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவு பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இந்த பார்லி உலகில் ஐந்தாவதாக அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும்.

இது உருசியா, கனடா போன்ற நாடுகளில் பார்லி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இது 2007 ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக பார்லி இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு 13 கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும்.

தன் மகரந்தைச் சேர்கை செய்யக்கூடிய இத்தாவர இருமய உயிரணுவில் 14 நிறமூர்த்தங்கள் (Chromosomes) காணப்படுகின்றன. தற்போது உணவுப் பயன்பாட்டிற்காக விளைவிக்கப்படும் வாற்கோதுமை (Hordeum Vulgare) அதன் காட்டு மூதாதையரான ஸ்பொண்டனியத்தின் (Spontaneum) துணைபிரிவினம் ஆகும்.

இது பரவலாக மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வளமான செழிப்பு பகுதி முழுவதும் புல் வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில், பார்லியின் உலக உற்பத்தி 155 மில்லியன் டன்களாக இருந்தது.

சாமை அரிசியினை சேர்ப்பதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள்

பார்லி சாகுபடி: 

  • பார்லி வளரும் பருவத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலை, 15 முதல் 20 °C (59 முதல் 68 °F) வரை விரும்பும் ஒரு பயிர் ஆகும்.
  • இது உலகம் முழுவதும் மிதமான பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
  • முழு சூரிய ஒளியில் நன்கு வடிகட்டிய மண்ணில் இது சிறப்பாக வளரும்.
  • வெப்பமண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில், இது தெற்காசியா, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் ஆண்டிஸில் உணவு மற்றும் வைக்கோலுக்காக வளர்க்கப்படுகிறது.
  • வறண்ட பகுதிகளில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
  • இது குறுகிய வளரும் பருவத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஒப்பீட்டளவில் வறட்சியைத் தாங்கக்கூடியது.
  • பார்லி மற்ற தானியங்களை விட மண்ணின் உப்புத்தன்மையை மிகவும் பொறுத்துக்கொள்கிறது
  • வெவ்வேறு சாகுபடிகளில் வேறுபடுகிறது.
  • இது குளிர்கால கோதுமையை விட குறைவான குளிர்கால கடினத்தன்மை கொண்டது மற்றும் கம்பு விட மிகவும் குறைவு.

தினை பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

வாற்கோதுமை ஊட்டச்சத்துக்கள்: 

  • ஆற்றல் – 515 kJ (123 kcal)
  • கார்போஹைட்ரேட்டுகள் – 28.2 கிராம்
  • சர்க்கரைகள் – 0.3 கிராம்
  • நார்ச்சத்து உணவு – 3.8 கிராம்
  • கொழுப்பு – 0.4 கிராம்
  • புரதம் – 2.3 கிராம்
  • வைட்டமின் ஏ
  • பீட்டா கரோட்டின்
  • தியாமின் (பி 1 ) – 7%0.083 மி.கி
  • ரிபோஃப்ளேவின் (B 2 ) – 5%0.062 மி.கி
  • நியாசின் (B 3 ) – 13%2.063 மி.கி
  • பாந்தோத்தேனிக் அமிலம் (B 5 ) – 3%0.135 மி.கி
  • வைட்டமின் பி – 6 7%0.115 மி.கி
  • ஃபோலேட் (B 9 ) – 4%16 μg
  • வைட்டமின் பி – 12 0%0 μg
  • கோலின் – 2%13.4 மி.கி
  • வைட்டமின் சி – 0%0 மி.கி
  • வைட்டமின் டி – 0%0 IU
  • வைட்டமின் ஈ – 0%0.01 மி.கி
  • வைட்டமின் கே – 1%0.8 μg
  • கால்சியம் – 1%11 மி.கி
  • செம்பு – 12%0.105 மி.கி
  • இரும்பு – 7%1.3 மி.கி
  • வெளிமம் – 5%22 மி.கி
  • மாங்கனீசு – 11%0.259 மி.கி
  • பாஸ்பரஸ் – 4%54 மி.கி
  • பொட்டாசியம் – 3%93 மி.கி
  • சோடியம் – 0%3 மி.கி
  • துத்தநாகம் – 7%0.82 மி.கி
  • தண்ணீர் – 68.8 கிராம்
  • கொலஸ்ட்ரால் – 0 மி.கி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement