Barnyard Millet in Tamil | Barnyard Millet in Tamil Meaning
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை சாப்பிடுகிறோம். அம்மா உணவை செய்து கொடுத்ததும் உணவு நல்லா இருந்தது என்றால் நல்ல இருக்கு என்று கூறுவோம். அதுவே நல்லாயில்லை என்றால் ஏன் இதை இப்படி செய்திருக்கிறாய் என்று கேட்போம். இந்த உணவிற்கு ஏன் இந்த பெயர் வந்தது இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, இவை செடியா, கொடியா போன்ற அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவு வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு உணவு அல்லது செடி போன்றவற்றை தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் barnyard millet in tamil பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…
Barnyard Millet in Tamil Name:
Barnyard Millet என்றால் தமிழில், குதிரைவாலி என்பதாகும். குதிரைவாலி அரிசி என்று கூறினால் அனைவருக்கும் புரியும். எனவே குதிரைவாலி பற்றிய தகவலை பின்வருமாறு அறிந்துகொள்வோம் வாங்க.குதிரைவாலி அரிசி பற்றிய தகவல் | Barnyard Millet in Tamil Images:
குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர்.
இந்தப் புன்செய் பயிரை பயிரிட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இதனுடைய உமி நீக்கப்பட்டு குதிரைவாலி அரிசி என்று அழைக்கிறோம். உமி நீக்கப்படாத தானியம் பழுப்பு நிறத்திலும், உமி நீக்கப்பட்ட தானியம் இளம் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
குதிரைவாலி அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதில் உள்ள சத்துக்கள் ஏராளமானதாக இருக்கிறது. இதில் தாதுக்கள் நீர்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இவை அளவில் சிறியதாகவும் மென்மையாகவும் காணப்படும்.
வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!
என்னென்ன தயாரிக்கலாம்:
இட்டலி, தோசை, கஞ்சி, உப்புமா, முறுக்கு போன்றவற்றை தயாரிக்க சிறந்ததாக இருக்கிறது. மேலும் சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல், தயிர் சாதம் போன்றவை செய்தால் இதனின் சுவை தாறுமாறாக இருக்கும்.
குதிரைவாலி அரசியின் பயன்கள்:
- நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
- புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
- உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது.
- நீரிழிவு நோயிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
- தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்வதற்கு பயன்படுகிறது.
- மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளை குறைப்பதற்கு உதவுகிறது.
Jowar பற்றிய சில அற்புதமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |