மன ஆரோக்கியத்திற்கு
வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை’ என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இன்று ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
அதேபோல் ‘இந்த செயலை செய்வது மிகவும் கடினம்’ என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நாம் வேறொரு கோணத்தில் ஏன் இதை எளிதில் செய்து பார்க்க கூடாது.’ என்று சிந்திக்க வேண்டும். இப்படி அனைத்து விதமான செயல்களையும் நாம் நேர்மறையாக சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்.
வாழ்வில் சில தோல்விகள் வந்தாலும் அதனை வெற்றியின் ஒரு படி என்று நேர்மறையாக நினைத்து, அந்த தோல்வியில் நீங்கள் செய்த தவறுகளை கண்டுப்பிடித்து அடுத்த முறை அதனை சரிசெய்துக்கொண்டு அடுத்த முறை அதைவிட அதிக பலன் பெரும் அளவிற்கு உங்கள் வெற்றி அமையும்.
அதுவே எதிர்மறையாக சிந்தித்தால் ஒரு தோல்வி வந்தால் கூட அடுத்தமுறை நீங்கள் அந்த செயலை நினைத்துப்பார்க்க கூட தயங்குவீர்கள். ஆனால் அந்த தோல்விக்கு எதோ ஒரு சிறிய காரணம் தான் இருந்து இருக்கும். அதனை நீங்கள் பரிசீலனை செய்து இருக்க மாட்டீர்கள். அதனால் புதிய முயற்சியை எடுக்க பயப்படுவீர்கள். காரணம் அதுவும் தோல்வியில் முடியும் என்ற உங்கள் எதிர்மறையான எண்ணம்.
நீங்கள் உங்கள் எதிர்மறையான எண்ணத்தை போக்கி வாழ்க்கையில் வெற்றி பெற, நேர்மறையான எண்ணம் பெற கீழே கூறியுள்ள வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.
எப்போதும் நேர்மறையான எண்ணம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்.
எனவே உங்கள் மனதை எப்போதும் நேர்மையான எண்ணத்துடன் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
1. மன நலன்:
உடல் நலனைப் போலவே மன நலனும் ஒருவருக்கு முக்கியம். ஆனால், தினசரி மன நலனுக்காக முக்கியத்துவம் யாரும் கொடுப்பதில்லை. ஆனால், நமது கலாச்சாரம் நமக்கு நல்ல மன நலத்தை வழங்கும். நல்ல தூக்கம், தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளே போதுமானது. தினசரி அன்றாட வாழ்வில் நாம் இவற்றைக் கடைப்பிடித்தாலே கவலையின்றி வாழலாம்.
2. ஆரோக்கியமான உணவு:
ஆரோக்கியமான உணவு நமது உடலையும் மனதையும் எப்போதும் புத்துணர்ச்சி உடன் வைத்துக்கொள்ளும். நமது உடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் நமது மனமும் தெளிவாக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. பொழுதுபோக்கு:
எந்த நேரமும் வேலை செய்துகொண்டே இருப்பதும் மன அழுத்தத்தை வழங்கும். நமக்கு ஒய்வு கிடைக்கும் நேரங்களில் சிறிது நேரம் மனதிற்கு இதம் தரக்கூடிய பாடல்கள் புத்தகங்கள் படிக்கலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். தொடர் பணிகளுக்கு இடையிலும் நம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
4. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி உடல் நலனுக்கு மட்டுமல்ல; மன நலனுக்கும் உகந்ததுதான். உடற்பயிற்சிகள் மனதிற்கு புத்துணர்ச்சியை வழங்கும். கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. எளிய நடைப்பயிற்சி போதுமானது. யோகா மற்றும் சுவாச பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
5. தூக்கம்:
ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான உணவு எவ்வளவு தேவையோ அதைபோல் நிம்மதியான தூக்கமும் தேவை. தினசரி 7 முதல் 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியமானது. இதனை விட குறைவான தூக்கம் கொண்டவர் கண்டிப்பாக மன நிம்மதி இன்றி இருக்க வாய்புண்டு. எனவே நிம்மதியான தூக்கம் கண்டிப்பாக தேவை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |