பாரதியார் வாழ்க்கை வரலாறு | Bharathiyar History in Tamil

பாரதியார் வாழ்க்கை வரலாறு தமிழ் | Bharathiyar Life History in Tamil

Bharathiar Biography in Tamil: சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர். இவர் கவிஞர் மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இவர் எழுதிய பாடல்களின்  மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். நமது தாய்மொழியான தமிழ் மொழி மீது மிகவும் பற்று கொண்டவராய் இருந்தார். பாரதியார் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான். சுதந்திர போராட்ட வீரர்களுள் பாரதியாரும் பங்கு எடுத்தவர் என்று நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த பதிவில் அவருடைய முழுமையான வரலாற்றினை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

பாரதியார் கவிதைகள்

பாரதியின் பிறப்பு, இறப்பு:

பாரதியின் இயற்பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியன்
பிறப்பு டிசம்பர் 11, 1882
பிறந்த இடம்எட்டயபுரம், தமிழ்நாடு
பாரதிக்கு வழங்கிய மற்ற பெயர் முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன், பாரதியார், மகாகவி
அவர் செய்த பணி கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், பத்திரிக்கையாசிரியர்
பாரதியாரின் பெற்றோர் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
துணைவியார் பெயர்செல்லம்மாள்
பிள்ளைகள்தங்கம்மாள், சகுந்தலா
பாரதி படைப்புகள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. பாஞ்சாலி சபதம் மற்றும் பல
சமயம்இந்து
இருப்பிடம்திருவல்லிக்கேணி, சென்னை
இறப்பு காலம் செப்டம்பர் 11, 1921

பாரதியாரின் இளமை பருவ காலம்:

Bharathiar Biography in Tamil

பாரதி தன்னுடைய 5-ம் அகவையிலேயே தன் தாயை இழந்துவிட்டார். ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கினார். இவருக்கு வயது 11 இருக்கும் நிலையில் கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றில் இருந்து இவரை  சுப்பிரமணிய பாரதியார் என்று அழைத்தனர்.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9-ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞ்சுகளோடும், பண்டிதர்களோடும் சொற் போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். அதனால் அவருடைய தமிழ் புலமை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியக்க ஆரம்பித்துவிட்டனர்

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பாரதியின் திருமண வாழ்க்கை:

Bharathiar Biography in Tamil1897-ம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதிக்கு தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த பாரதிக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு பாலியல் திருமணம் நடந்தது. இது மாதிரியான  தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று மனதில் பாரதியார் அப்போதே கருதிவிட்டார். பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக நின்றவர் பாரதி.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

பாரதி அறிந்த மொழிகள்:

 bharathiar vazhkai varalaru in tamil

05 வயதில் தாயை இழந்த பிறகு 16 வயதில் தன் தந்தையையும் இழந்து மிகவும் வறுமையில் வாடினார். அதன் பிறகு கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலைகழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை கற்றறிந்தார். இந்த மொழி மட்டுமல்லாமல் ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார். இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக சொன்னார் மகாகவி பாரதியார்.

பாரதி ஆற்றிய தொண்டு:

 bharathiyar life history in tamilபாரதி 4 ஆண்டு காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார். அதன் பிறகு பாரதியார் எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக சில காலம் தொண்டு செய்தார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு  தமிழ் ஆசிரியராக மதுரை சேதுபதி பள்ளியில் பாரதியார் பணியாற்றினார். பிறகு சுதேயசிய மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

சுதந்திர போராட்டத்தில் பாரதி ஆற்றிய பணி:

 subramaniya bharathiar history in tamil

சுதந்திர தாகத்தை தணிக்க 1905-ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அதன் பிறகு பாரதியார் கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றவர்களோடு நெருங்கி நட்பு கொண்டார். அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். மகாசபை கூட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திப்பதற்கு பாரதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவி பாரதியை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.

பாரதியார் அதன் பிறகு 1907 ஆம் ஆண்டில் “இந்தியா” என்னும் வார இதழையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். பாரதி ஆசிரியராக இருந்து பணியாற்றிய இந்தியா என்னும் வார பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திர போராட்டத்தில் பாரதி எழுதிய பாடல்கள் தமிழக மக்களிடம் காட்டுத்தீ போன்று பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.

கத்தியின்றி ரத்தமின்றி 
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் 

என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil