உடலில் திடீரென்று வரும் மச்சம் நல்லதா? கெட்டதா?

Advertisement

Birthmark is Good or Bad in Tamil

பொதுவாக அனைவரது உடலிலும் மச்சம் என்பது இருக்கும். இந்த மச்சங்களில் சில அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மச்சங்கள் கண், மூக்கு, உதடு, காது, ககன்னம் என்று எங்கு வேண்டுமானாலும் வரும், பிறப்பில் இருந்தே மச்சம் இருக்கிறது என்றால் அதனை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், அதுவே நாம் வளர்ந்த பிறகு திடீர் என்று ஒரு மச்சம் உருவாக்கி இருக்கிறது என்றால் அதனை நீங்க கண்டிப்பாக கவனிக்க வேண்டும், அதாவது அந்த மச்சம் அப்படியே இருந்தால் ஒன்று பயம் இல்லை அதுவே அவற்றில் மாற்றம் தெரிகிறது என்றால் அதனை நாம் அவசியம் கவனித்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும், ஏன் என்றால் அது நமக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். சரி வாங்க நம் உடலில் திடீர் என்று தோன்றும் மச்சம் நல்லதா அல்லது கெட்டதா என்றும் படித்தறியலாம்.

நம் உடலில் மச்சம் எப்படி தோன்றுகிறது?

உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது, ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்து, அடைப்பை ஏற்படுத்தும்போது அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகின்றன. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கால் அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருக்கும். இது அவர்கள் வளர வளர மறைந்துவிடும். கருப்பு தவிர வெள்ளை, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களிலும் மச்சங்கள் காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்

உடலில் திடீரென்று வரும் மச்சம் நல்லதா? கெட்டதா?

ஆரோக்கியம் பொறுத்தவரை மச்சம் என்பது நம் உடலுக்கு எந்த ஒரு பாதிப்புகளையும் தருவதில்லை. இருப்பினும் அந்த மச்சங்கள் மீது ஏதாவது அரிப்போ அல்லது அந்த மச்சத்தின் அளவு பெரியதாகி இருந்தால் அதனை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

மச்சம் ஒருவருக்கு அதிகமாக இருக்கிறது என்றால் அது மரபணுக்களின் கோளாறாக இருக்கலாம் அல்லது சரும புற்றுநோயாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே மச்சத்தை யாரும் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

ஆபத்து இல்லாத மச்சம் எது?Birthmark is Good or Bad in Tamil

மச்சங்கள் கரடு முரடான இல்லாமலும், வழுவழுப்பாகவும், குவிந்த வடிவில் இருந்தாலோ, 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ, அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் மாறாமல் அப்படியே இருந்தாலோ அது ஆபத்தில்லாத மச்சங்கள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆணுக்கு எங்க மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

ஆபத்தான மச்சம் எது?

ஆபத்தான மச்சங்கள், ‘மெலனோமா’ என்ற சருமப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆக திடீர் என்று ஒரு மச்சம் உங்கள் உடலில் தோன்றிகிறது அவற்றில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது என்றால் அதனை அலட்சியம் செய்யலாம் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது மிகவும் சிறந்தது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement