Bitter Gourd in Tamil
ஹாய் நண்பர்களே..! பாகற்காய் என்பது அனைவருடைய வீட்டிலும் உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள கூடிய ஒரு காய் ஆகும். இந்த பாகற்காய் நம்முடைய உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. நாம் தினமும் சாப்பிட கூடிய இந்த பாகற்காயில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. அத்தகைய தகவல்களை பற்றி இன்னும் விரிவாக இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு நீங்களும் பயன்பெறலாம் நண்பர்களே..!
இதையும் படியுங்கள்⇒ கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்
பாகற்காய் பற்றிய தகவல்கள்:
கசப்பு சுவையுள்ள இந்த பாகற்காய் உணவாக பயன்படுகிறது. இந்த பாகற்காய் மேலே பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் சொர சொரப்பாகவும் அதன் உள் பக்கத்தில் வெள்ளை நிறத்திலும் அதனுடைய விதைகள் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
இந்த பாகற்காய் நிலத்தினை தாவர வகையை சார்ந்த குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி வகை குடும்பங்களை சேர்ந்த ஒரு வகை காய் ஆகும்.
பாகற்காயின் தாய் நாடக இந்தியா விளங்குகிறது. அதன் பிறகு 14 நூற்றாண்டில் இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட பாகற்காயை இந்தியா சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது.
பாகற்காயின் சிறப்பு அம்சங்கள்:
இந்த பாகற்காய் கொடியானது 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய தன்மை கொண்டுள்ளது. பாகற்காயின் இலை விளும்புகள் 4 முதல் 12 செ.மீ வரை இடைவெளி விட்டு இருக்கும்.
இத்தகைய பாகற்காய் கொடியானது தனித்தனியான ஆண், பெண் மலர்களை கொண்டிருக்கும் சிறப்பு தன்மை வாய்ந்தது.
ஜூன் – ஜூலை மாதத்தில் கொடியில் பூக்கள் பூத்து அதன் பிறகு செப்டம்பர் – நவம்பர் மாதத்தில் கனி ஆகி விற்பனை செய்யப்படுகிறது.பாகற்காயின் நன்மைகள்:
சர்க்கரை நோய்களுக்கு சிறந்த பயன் அளிக்க கூடியதாக இந்த பாகற்காய் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பாகற்காய் ஜூஸ் தினமும் காலையில் குடிப்பதால் இரைப்பை, வீக்கம், அலர்ஜி, கட்டி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பயனை தரக்கூடிய ஒரு மருந்தாக காணப்படுகிறது.
நார்ச்சத்துக்கள் பாகற்காயில் அதிகமாக இருப்பதால் மலசிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை தருகிறது.
கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள் |
பாகற்காய் சாப்பிட கூடாதவர்கள்:
- கர்ப்பிணி பெண்கள்
- நீரிழுவு நோயாளிகள்
- மயக்கம் உள்ளவர்கள்
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- வாந்தி
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி பாகற்காய் சரியான அளவில் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பாகற்காய் சாப்பிட வேண்டியவர்கள்:
- செரிமான கோளாறு
- ஆஸ்துமா உள்ளவர்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
- புற்றுநோய் உள்ளவர்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்
உடலுக்கு நன்மை தக்கூடியதாக இருந்தாலும் அதனை சரியான அளவில் மருத்துவரிடம் கேட்டு சாப்பிட வேண்டும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |