இரத்த வகைகள் எத்தனை? | Blood Group Types in Tamil

Advertisement

இரத்த வகைகள் பற்றிய தகவல்கள் | Blood Group Details in Tamil

மனித உடலின் செயல்பாடானது இரத்தத்தின் மூலமே நடைபெறுகிறது. இரத்தமானது பல வகையாக இருக்கிறது. மனிதரின் இரத்தமானது பல வகையான மூல பொருள்களினால் ஆனது. இதில் வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளாட்டிலேட்ஸ் என மூன்று வகைகள் உள்ளது. வெள்ளை அணுக்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை உடலில் கடத்தி செல்கிறது. பிளாட்டிலேட்ஸ் என்பவை ரத்தம் உறைவதை தடுக்கிறது. இவை மூன்றும் தான் மனித இரத்தத்தின் முக்கிய பங்கீடுகள். நாம் இந்த பதிவில் இரத்தம் எத்தனை வகை மற்றும் இரத்த வகைகளின் சில தகவல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

இரத்தம் அதிகரிக்க

இரத்த வகைகள் எத்தனை?

இரத்த வகைகள் எத்தனை

மனிதரின் இரத்த வகைகளில் 4 உள்ளது. A, B, AB மற்றும் O. இவற்றில் ஏதேனும் ஒரு வகை இரத்த குரூப்பை மனிதர்கள் கட்டாயம் கொண்டிருப்பார்கள்.

பாம்பே பிளட் குரூப் | Bombay Blood Group Details in Tamil:

Bombay Blood Group Details in Tamil

 • பாம்பே இரத்த வகையானது முதன் முதலில் பம்பாயில் தான் கண்டறியப்பட்டது. இதனால் தான் HH இரத்த பிரிவினை பாம்பே குரூப் என்று மருத்துவ வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
 • இந்த ரத்தப் பிரிவை, 1952-ம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே (Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார்
 • இந்த இரத்த வகையானது 10 லட்சம் மக்கள் தொகையில் அதிகபட்சமாக நான்கு நபர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த பாம்பே வகை இரத்தமானது கிடைப்பதற்கு மிகவும் அரிதான ஒன்றாகும்.
 • ‘பாம்பே குரூப்’ உள்ள ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டால், மற்ற எந்தப் பிரிவு உள்ள ரத்தத்தையும் அவர்களுக்கு ஏற்ற முடியாது.

இதய நோய் பாதிக்காத இரத்த வகை:

 Blood Group Types in Tamil

ஒருவர் இரத்த வகையில் O குரூப்பை கொண்டிருந்தால் அவர்களுக்கு பிறவகை இரத்தத்தை காட்டிலும் இதய நோய் தாக்குதல் என்பது குறைவாக இருக்கும்.

இரத்தத்தை எதனை வைத்து கணக்கிடுகிறார்கள்:

 இரத்த வகைகள் பற்றிய தகவல்கள்

ரத்தத்தில் உள்ள சிறிய புரதமானது ஆன்டிஜென் (antigen) என அழைக்கப்படுகிறது. இதனை வைத்துதான் ரத்த வகை கணிக்கபடுகிறது.

அதாவது, ஒருவர் ரத்தத்தில் A ஆன்டிஜென் இருந்தால் “A” குரூப் என்றும், B ஆன்டிஜென் இருந்தால் B குரூப் என்றும், இதில் இவை இரண்டும் இருந்தால் AB குரூப் என்றும், இவற்றில் எந்தவித ஆண்டிஜென்னும் இல்லை என்றால் O குரூப் என்றும் கருதப்படுகிறது.

இரத்த சோகை உள்ளவர்கள் இதையும் படிக்கவும்👉👉👉  இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு

இரத்த தானம் செய்ய எந்த வகை இரத்தம் சரியானது:

 Blood Group Details in Tamil

 • O நெகட்டிவ் இரத்த வகையினர் யாருக்கு வேண்டுமானாலும் இரத்த தானம் கொடுக்கலாம்.
 • ஏனெனில் இந்த வகையான இரத்தத்தில் எந்த ஆன்டிஜெனும் இல்லாததால் பிறவகை இரத்தத்தினருக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

எல்லா வகையான இரத்தம் யாருக்கு பொருந்தும்:

 blood donation details in tamil

விடை: AB+

 • AB+ என்ற ரத்த வகையை “உலகளாவிய பெறுநர்கள்” என்று சொல்வார்கள்.
 • அதாவது, இந்த வகையில் எல்லா விதமான (A, B, மற்றும் Rh) ஆன்டிஜென்களும் இருப்பதால் இவை யாருடைய ரத்தத்தையும் ஏற்று கொள்ளும் தன்மை கொண்டது.

அரிதான இரத்த வகை:

 அரிதான இரத்த வகை

 • மற்ற இரத்த வகைகளை காட்டிலும் AB- இரத்த வகைதான் மிகவும் கிடைப்பதற்கு அரிதான இரத்த வகையாகும். உலகளவில் இந்த வகை இரத்தமானது 1% சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது.
 • எனவே நீங்கள் இந்த ரத்த வகையை சேர்ந்தவர் என்றால் கட்டாயம் கவனம் தேவை. ஏனெனில் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்தால் ரத்தம் கிடைப்பது மிகவும் அரிதானது.
newஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்..!

உடலில் இரத்தத்தின் எடை:

 • ஒருவரின் உடலில் சராசரியாக இரத்தத்தின் எடையானது 7% முதல் 8% வரை இருக்கும்.
 • 92% நீரானது இரத்தத்தில் உள்ளது. உடலில் இரத்தத்தின் அளவானது குறையும் போது இரத்த சோகை பிரச்சனை ஏற்படுகிறது.

ஆண் மற்றும் பெண்ணிற்கு உடலில் இரத்த அளவு வேறுபாடு இருக்கா?

 Blood Group Types in Tamil

 • உடலில் ஆண்கள் மற்றும் பெண்ணிற்கு இரத்த அளவில் வேறுபாடு இருக்கிறது.
 • பெண்களுக்கு உடலில் 4-5 லிட்டர் ரத்தமும், ஆண்களுக்கு 5-6 லிட்டர் ரத்தமும் சராசரியாக அவர்களின் உடலில் இருக்குமாம். இது ஒவ்வொருவரின் உடல் பருமனை பொறுத்து அமையும்.
இரத்த புற்றுநோய் அறிகுறிகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement