Blueberry in Tamil Name
அனைவர்க்கும் அன்பான வணக்கம்..! பொதுவாக இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டாலும், தமிழ் மொழிக்கு இருக்கும் பெருமையும் சிறப்பும் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. அதுபோல நாம் அனைவருமே தினமும் பல வார்த்தைகளை பேசுகின்றோம். அப்படி பேசும் வார்த்தைகளில் சில வார்த்தைகள் மட்டும் தான் தமிழ் மொழியாக இருக்கும். மற்ற சில வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளாக இருக்கின்றன.
ஆகவே நாம் தினமும் தமிழ் ஆங்கிலம் என்று கலந்து தான் பேசி வருகின்றோம். அதிலும் நாம் தமிழ் வார்த்தை என்று நினைத்து ஆங்கில வார்த்தைகளை பேசுகின்றோம். எனவே அதை உங்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு வார்த்தைக்கான தமிழ் பெயரையும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக புளுபெர்ரி என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
புளுபெர்ரி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..
புளுபெர்ரி என்றால் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே புளுபெர்ரி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருப்போம். புளுபெர்ரி என்பது ஓரு பழம் ஆகும்.
அதாவது புளுபெர்ரி என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இந்த புளுபெர்ரி கனிகள் கருநீல நிறத்தில் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை Cyanococcus என்ற பேரினத்தை சேர்ந்ததாக இருக்கிறது.
இந்த புளுபெர்ரி பழங்கள் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இது வணிக ரீதியாக ஐரோப்பாவில் 1930 வரை அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த புளுபெர்ரி செடியின் புதர்கள் பொதுவாக நிமிர்ந்த நிலையிலும், சாய்த நிலையிலும் இவற்றின் உயரம் 10 செண்டி மீட்டர் (3.9 அங்குலம்) முதல் 4 மீட்டர் (13 அடி) வரை வேறுபடுகிறன.
இந்த செடியின் இலைகள் 1-8 செ.மீ (0.39–3.15 அங்குலம்) நீளமும், 0.5–3.5 செ.மீ (0.20–1.38 அங்குலம்) அகலம் கொண்டவையாகவும் இருக்கிறது. இதன் பூக்கள் மணி வடிவம் கொண்டதாகவும், வெண்மை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்துடனும், சில நேரங்களில் பசுமைதோய்ந்த நிறத்திலும் இருக்கின்றன.
ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவீர்களா.. அப்போ இந்த விஷயம் தெரியுமா..
இதன் பழங்களின் முனையில் 5–16 மி.மீ (0.20–0.63 அங்குலம்) விட்டம் உடைய கிரீடம் போன்ற அமைப்பு இருக்கும். மேலும் இந்த புளுபெர்ரி பழங்கள் முதலில் வெளிர் பச்சை நிறத்திலும், பின்னர் சிவப்பு – ஊதா நிறமாகவும், இறுதியாக பழுக்கும் போது அடர் ஊதா நிறத்தை அடைகின்றன.
புளுபெர்ரி தமிழ் பெயர்:
நாம் அனைவருக்குமே இந்த புளுபெர்ரி பழத்தை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்போம். அந்த அளவிற்கு நம்மை ஈர்க்கக்கூடிய பழமாக புளுபெர்ரி இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கும் இந்த புளுபெர்ரி பழத்தின் உண்மையான தமிழ் பெயர் என்ன என்று அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதை பற்றி இப்போது பார்ப்போம்.
புளுபெர்ரி என்பதன் தமிழ் பெயர் அவுரிநெல்லி என்பதாகும்.அதுபோல புளுபெர்ரி இந்தியாவில் ஜாமூன் என்றும் அழைக்கப்படுகிறது. ஜாமுன் என்பது சாமான்ய மொழி ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |