ப்ளூடூத் பயன்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்..?

Advertisement

Bluetooth Inventor in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்தகொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு எங்கள் Pothunalam.Com பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். சரி நீங்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா..? இது என்ன கேள்வி என்று கேட்பீர்கள். உண்மை தான். இன்றைய நிலையில் யார் தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை சொல்லுங்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி பட்டன் போனாக இருந்தாலும் சரி அதில் ப்ளூடூத் கட்டாயம் இருக்கும். பொதுவாக நாம் அனைவருமே ப்ளுடூத் பயன்படுத்தி இருப்போம். அந்த வகையில் இன்று ப்ளூடூத் பயன்பாட்டை கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ப்ளூடூத் என்றால் என்ன..?  

ப்ளூடூத் என்றால் என்ன

புளூடூத் என்பது ஒரு குறுகிய தூர Wireless தொழில்நுட்பத் தரமாகும். இது நிலையான மற்றும் மொபைல் சாதனங்களுக்கு இடையேயான தரவை குறுகிய தூரத்தில் பரிமாறிக்கொள்ளவும், தனிப்பட்ட பகுதி நெட்வொர்க்குகளை (PAN)  உருவாக்கவும் பயன்படுகிறது. 

ப்ளூடூத் 10 மீட்டர் (33 அடி) வரை மிகக் குறுகிய வரம்பைக் கொடுக்க உதவுகிறது. இது 2.402 GHz முதல் 2.48 GHz வரையிலான ISM இசைக்குழுக்களில் UHF ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது.

இது முக்கியமாக வயர் இணைப்புகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அருகிலுள்ள சாதனங்களுக்கு இடையில் கோப்புகளை பரிமாறிக்கொள்ளவும், செல்போன்கள் மற்றும் மியூசிக் பிளேயர்களை வயர்லெஸ் ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும் பயன்படுகிறது.

கட், காப்பி, பேஸ்ட் (Cut Copy Paste) கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

ப்ளூடூத் பயன்பாட்டை கண்டுபிடித்தவர் யார்..?

ப்ளூடூத் என்றால் என்ன

இதுகுறுகிய இணைப்பு ரேடியோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பின்னர் புளூடூத் என்று பெயரிடப்பட்டது. டச்சு பொறியாளர் ஜாப் ஹார்ட்சன் என்பவர் 1990 ஆம் ஆண்டில் ப்ளூடூத் பயன்பாட்டை கண்டறிந்தார்.

1990 -களின் நடுப்பகுதியில் எரிக்சனின் மொபைல் போன் பிரிவில் பணிபுரிந்த டச்சு பொறியாளர் ஜாப் ஹார்ட்சன் பல்வேறு குறைந்த சக்தி கொண்ட ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தி, கேபிள்களைப் பயன்படுத்தாமல் குறுகிய தூரத்தில் எலக்ட்ரானிக் கேஜெட்களை ஒன்றோடொன்று இணைக்கும் புரட்சிகரமான வழியைக் கண்டறிந்தார்.

அது தான் இப்போது நாம் பயன்படுத்தும் ப்ளூடூத் அமைப்பு ஆகும். இது இப்போது உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

👉 நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement