வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போகம் என்றால் என்ன?

Updated On: January 2, 2025 6:48 PM
Follow Us:
Bogam Meaning in Tamil
---Advertisement---
Advertisement

போகம் என்றால் என்ன அர்த்தம் – Bogam Meaning in Tamil

அனைவருக்கும் இன்று நாம் காண இருப்பது நமது வாழ்வியலின் நான்கு வகையான நிலைகள் இருக்கின்றன.. அவை சோகம், போகம், யோகம், ஞானம் ஆகும். இவற்றில் நாம் இன்று தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் போகம் என்பது என்ன? அதற்கு என்ன அர்த்தம் என்பது பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம்.

நமது வழக்கை அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, ஒருவர் ஆனந்தமாகவும், ஒருவர் வருத்தப்படக்கூடியவராகவும், இருக்கக்கூடிய நிலையில் இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம், அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை நம்முடைய வாழ்க்கைக்கு மட்டுமா என்று பார்த்தோம் என்றால், நமக்கு மட்டும் பொருந்தாது, நாம் வாழக்கூடிய அந்த பகுதியை சார்ந்ததாகக்கூட இருக்கின்றது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி என்றால் நான்கு நிலைகளாக ஓன்று சோகமான வாழ்கை, இரண்டு போகமான வாழ்கை, மூன்று யோகமான வாழ்கை, நான்கு ஞானமான வாழ்க்கை.

இந்த நான்கு நிலைகளில் தான் ஒரு மனிதனுக்கு வாழ்கை அமைந்திருக்கின்றன. அவற்றைப்படிதான் இந்த மனிதனும் வாழ்த்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் வாழ்வதில்லை மனிதன் வாழ்த்துக்கொண்டிருக்கின்ற அந்த பகுதியை நாடு என்று சொல்லலாம், அவைகளும் அப்படி தான், அதற்கு ஏற்றார் போல் தான் அமைந்திருக்கின்றன. இவற்றில் நாம் போகமான வழக்கை என்றால் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜோதிடம் என்றால் என்ன அவற்றை பற்றிய சில தகவல்கள்.

போகம் என்றால் என்ன?

நமக்கு தேவையானவற்றையெல்லாம் உணவு, உடை, இருப்பிடம், வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்து ஆனந்தம் மட்டுமே தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக கருதிக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருக்க கூடிய மனிதர்கள் பலர் இருக்கின்றன அவர்களெல்லாம் போகமான வாழ்க்கையை வாழக்கூடிய மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உலகளாவிய சந்தோசத்தை அனுபவிக்க கூடியது போகமாகும். இறைநிலை சந்தோசத்தை அடையக்கூடியது யோகமாகும். ஆணும், பெண்ணும் புணர்தல் போகமாகும். அதாவது, இரண்டு உருவங்கள் இணைவது போகமாகும்.

அதாவது போகம் இன்பத்திற்காக செய்யப்படுவது ஆகும். போகம் என்றால் இன்பத்தை அனுபவிப்பது ஆகும்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய முக்கிய ஐம்புலன்களினால் நாம் அழுத்தம் ஒலி, ஒளி, ஒழி, சுவை, மணம் ஆக எந்த பொருளோடு தொடர்பு கொள்வதன் மூலம் இன்பத்தை அனுபவித்தாலும் அந்த அனுபவம் தான் போகம் ஆகும்.

மேலும் போகம் என்பது இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் பொதுவான வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.

இல்லறம் என்பதே இல்லம் கொண்டு பொருளேந்தி, காத்து, துய்த்து, பிறருக்கு உதவி வாழக்கூடிய நெறியாகும்.

துறவரம் என்பது பொருள் ஈட்டுவதை மட்டும் நிறுத்தி அறிவுத்துறையில் முழுமை பெற்று அந்த முழுமைப்பேற்றை மக்களுக்கு வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துதல். தன்னை சமுதாயத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்டு விருப்பு, வெறுப்பு இன்றி அறிவுத்துறையில் தொண்டாற்றுதல் துறவறம் ஆகும்.

மகிழ் போகம் அனைவருக்குமே வேண்டும். துறவில் உள்ளவர்க்கும் உணவு வேண்டும். அவர்களும் உணவு உண்ணும் போது உடல் ஏற்றுக்கொள்ளும் முறையில் உணவினை இனிமையாகவே அமைத்துக் கொள்வார்கள்.

எந்த ஜீவனுக்கும், உடலுக்கும், உயிருக்கும் அந்த நேரத்தில் தேவையாய் பொருத்தமாய் வந்த அனுபோகம் இன்பமாம் என்ற வகையில் புலன்களைக் கொண்டு இன்பமடையும் போகம் என்பது எல்லோருக்கும் பொதுவே ஆகும்.

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நற்பவி என்றால் என்ன தெரியுமா.?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now