Bottle Gourd என்றால் தமிழில் என்ன.? அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Bottle Gourd in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். அதாவது, இப்பதிவில் Bottle Gourd என்றால் தமிழ் என்ன என்பதையும், அதன் பெயர் என்ன என்பதையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Bottle Gourd என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், தமிழில் அதற்கு அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைப்போம். அப்படி Bottle Gourd என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Bottle Gourd in Tamil:

Bottle Gourd என்றால் தமிழில் சுரைக்காய் என்பதாகும். அதாவது Bottle Gourd என்பதன் தமிழ் பெயர் சுரைக்காய் ஆகும்.  சுரைக்காய் என்பது ஒரு வகை காய் ஆகும். இதில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை வெயில் காலத்தில் அதிக அளவில் எடுத்து கொள்ளும்போது உடலிற்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது.

 சுரைக்காய் பற்றிய தகவல்

உங்களுக்கு சுரைக்காய் என்றால் பிடிக்குமா..? இந்த கேள்வி எதற்கு என்று யோசிப்பீர்கள். காரணம் இருக்கிறது..? அதை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது சுரைக்காய் பற்றிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சுரைக்காய் பற்றிய தகவல்:

bottle gourd

சுரைக்காய் பார்ப்பதற்கு எப்படி இருக்கும். சமைத்து சாப்பிட்டால் அதன் சுவை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அதன் வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?

சுரைக்காய் என்பது ஆங்கிலத்தில் Calabash அல்லது Bottle gourd என்று அழைக்கப்படுகிறது.

சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria என்று சொல்லப்படுகிறது. அதுபோல உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காய் தொடக்க காலத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை என்றும் இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

சுவையான சுரைக்காய் சட்னி செய்வது எப்படி

சுரைக்காய் சத்துக்கள்:

  • நார்ச்சத்து
  • வைட்டமின் C
  • ரிபோஃப்ளேவின்
  • துத்தநாகம்
  • தயமின்
  • இரும்பு சத்து
  • மெக்னீசியம்
  • மற்றும் மாங்கனீசு
  • நீர்ச்சத்து
  • கலோரி

இதுபோன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய். முக்கியமாக, 100 கிராம் சுரைக்காயில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. 15% கலோரிகள் நிறைந்துள்ளது.

சுரைக்காய் வளரும் தன்மை:

சுரைக்காய் வளரும் தன்மை

ஆனால் இன்றைய நிலையில் சுரைக்காய் உலகமெங்கும் பயிரிடப்பட்டு வருகிறது. அதுபோல சுரைக்காய் 2 அடி நீளம் மற்றும் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்ச்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.

இந்த சுரைக்காய் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்தாலும், இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது.

சாகுபடி செய்யும் முறை:

சாகுபடி செய்யும் முறை

முதலில் நிலத்தை நன்கு உழுது கொள்ள வேண்டும். பின் 10 அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். அடுத்து வாய்க்காலில் தேவையான அளவு இயற்கை உரம் இட்டு 3 அடி இடைவெளியில் விதை விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

பின் ஒரு வாரம் கழித்து துளிர் வர துவங்கும். அதன் பிறகு 10-15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

பிறகு ஒரு மாதம் கழித்து பூக்கள்பூக்க தொடங்கும். 40-45 நாட்களில் சுரைக்காய் காய்க்கும். அடுத்து 45-60 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யலாம்.

👉சுரைக்காய் சாகுபடி பற்றி உங்களுக்கு தெரியுமா

சுரைக்காய் பயன்கள்:

சுரைக்காய் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய் ஆகும். இது உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைக்க பயன்படுகிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் அதிகளவு சுரைக்காய் பயன்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement