Brothers Day in Tamil | உலக சகோதரர்கள் தினம்
அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க கூடிய உறவு என்றால் அது சகோதரர் உறவு. எல்லோர் வாழ்க்கையிலும் உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதரர்கள் என்று கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சகோதரர்கள் இருப்பது ஒரு ஆசீர்வாதம் தான். அவர்கள் தான் நம்முடைய ஆதரவாளர்கள். சிறிய வயதில் இருந்து நம்மை புரிந்து கொள்ளும் உடன் பிறந்தவர்கள்.
நமக்கு ஏதாவது கஷ்டமோ அல்லது பிரச்சனையோ வரும் போது அவர்களின் ஆதரவு தான் முன்னிலையில் இருக்கும். அப்படி நம்முடன் இருக்கும் சகோதரர்களை நினைவு கூறும் விதமாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதற்கும் ஒரு நாள் இருக்கிறது. அதாவது சகோதரர்கள் தினத்தை தான் சொல்கிறேன். ஆகவே இந்த பதிவின் வாயிலாக உலக சகோதரர்கள் எப்போது..? அது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற முழு விவரங்களையும் தெரிந்த கொள்ளலாம் வாங்க.
உலக சகோதரர்கள் தினம் எப்போது..?
பாசத்தின் எல்லையாகவும், அன்பின் ஆழமாகவும் இருப்பவர்கள் தான் சகோதரர்கள். அப்படி சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 24 ஆம் தேதி அன்று சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதாவது 2024 ஆம் ஆண்டு வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் அவர்களின் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
அதுபோல பெரும்பாலான சிறப்பு தினங்களைப் போலவே இந்த உலக சகோதரர்கள் தினமும் அமெரிக்காவில் தான் தோன்றியது. அதாவது 2005 ஆம் ஆண்டு உலக சகோதரர்கள் தினம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இப்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் உலக சகோதரர்கள் தினம் 2001 இல் ஹூவர், அலபாமாவின் சி. டேனியல் ரோட்ஸ் என்பவரால் குடும்பத்தைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது அலபாமாவின் சி. டேனியல் ரோட்ஸ் குடும்பம் மற்றும் சகோதரர்களை கௌரவிக்கும் நாளாக இதை உருவாக்கினார் என்று சொல்லப்டுகிறது.
சகோதரர்கள் தினம் கொண்டாடும் நோக்கம்:
என்ன தான் உடன் பிறந்தவர்கள் வளரும் வரை நம்முடன் இருந்தாலும், வேலை திருமணம் என்று ஏதோ ஒரு காரணத்தினால் பிரிவை சந்திக்கிறோம். ஆகவே தேசிய சகோதரர் தினம் என்பது உங்கள் சகோதரருடன் அழகான நினைவுகளை உருவாக்க ஒரு வாய்ப்பாகும்.
அதுமட்டுமில்லாமல், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும், நீங்கள் ஒன்றாகக் கழித்த அற்புதமான காலங்களை மீண்டும் நினைவுபடுத்தவும், உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஆகவே உலகில் உள்ள ஒவ்வொருவரும் மே 24 ஆம் தேதி உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் பாச மழையாக சகோதரர்கள் தின வாழ்த்துக்களை பொழியுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |