கைக்குத்தல் அரிசி சாப்பிடுபவரா நீங்கள்..! அப்போ இந்த தகவலை தெரிந்துக்கொண்டு சாப்பிடுங்கள்..!

Advertisement

Brown Rice in Tamil

அனைவருக்கும் பசி என்பது இயல்பான ஒன்றாக தான் இருக்கிறது. நமக்கு தினமும் வரும் பசியினை நமக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மூலம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். அதில் நாமும் அதிகமாக சாப்பிடும் உணவு என்றால் அது அரிசினால் ஆன உணவு தான். இத்தகைய அரிசியிலும் பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி, கைக்குத்தல் அரிசி, கறுப்பு கவுனி அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி என நிறைய வகைகள் இருக்கிறது. இதில் எப்படி பல வகைகள் இருக்கிறதோ அதேபோல் இதனுடைய சத்துக்கள் மற்றும் ரெசிபிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது. அதனால் இன்று அரிசி வகைகளில் ஒன்றான கைக்குத்தல் அரிசி பற்றிய தகவல்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கைக்குத்தல் அரிசி பற்றிய தகவல்:

 கைக்குத்தல் அரிசி பயன்கள் நாம் சாப்பிடும் மற்ற அரிசி வகைகளை விட விரைவில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டது கைக்குத்தல் அரிசி. ஆனால் இதனை சமைப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகலாம்.

அதேபோல் இந்த அரிசியில் இருந்து தயார் செய்த சாதத்தினை நம்மால் நிறைய சாப்பிட முடியாது. குறைவாக மட்டுமே தான் சாப்பிட முடியும். இது பார்ப்பதற்கு கொஞ்சம் தடினமாக இருப்பதால் இந்த அரிசியில் இருந்து தோல் நீக்கப்பட்ட பிறகு உமி தயாரிக்கப்படுகிறது.

இத்தகைய கைக்குத்தல் அரிசி ஆனது சர்வதேச அரிசி ஆண்டில் இருந்து உருவாக்கப்பட்டது. மேலும் கைக்குத்தல் அரிசிக்கு பழுப்பு நிற அரிசி என்று மற்றொரு பெயரும் உள்ளது.

கைக்குத்தல் அரிசியில் உள்ள சத்துக்கள்:

1 கப் கைக்குத்தல் அரிசியில் 10-ற்கும் மேற்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.

  • பாஸ்பரஸ்
  • துத்தநாகம்
  • மெக்னீசியம்
  • கலோரிகள்
  • புரதம்
  • தாமிரம்
  • மாங்கனீசு
  • செலினியம்
  • கொழுப்புசத்து
  • தியாமின்
  • நியாசின்
  • இரும்புசத்து
  • கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்து
  • தாமிரம்
எள்ளை சாப்பிடுவதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் 

Kaikuthal Arisi Benefits in Tamil:

 kaikuthal arisi benefits in tamil

பழுப்பு அரிசியினை நாம் உட்கொள்வதால் இதில் உள்ள நார்சத்து ஆனது நம்முடைய உடலில் ஏற்படும் செரிமான கோளாறு, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கச் செய்து சாப்பாட்டினை எளிதில் செரிமானம் ஆகச் செய்கிறது.

அதேபோல கைக்குத்தல் அரிசியினை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடலின் கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்து இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உதவுகிறது.

இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆனது நம்முடைய உடலுக்கு சர்க்கரை நோய் எதுவும் வராமல் இருக்க மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் உடல் எடையினை அதிகரிக்காமல் இருக்க செய்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ உதவி புரிகிறது.

மேலும் இதில் உள்ள செலினியம் ஆனது நம்முடைய உடலில் பெருங்குடல் புற்றுநோய் வருவதை தடுக்கவும், புற்றுநோய் ஏற்படுவதை உண்டாக்கும் ரசாயனங்கள் தங்குவதை தவிர்த்து இதில் உள்ள நார்சத்து ஆனது செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement