Buddha Purnima Date 2024 and Time
இந்துக்கள் முறையில் நிறைய பண்டிகை இருக்கிறது. ஏன் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் பண்டிகை ஆக தான் இருக்கும். இப்படி நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் எப்போது வருகின்றது என்று முன்னடியே அறிந்து கொள்வோம். இப்போ தீபாவளி வருகிறது என்றால் அதனை ஒரு மாதத்திற்கு முன்பே எப்போது வருகிறது, தேதி, நேரம் போன்றவற்றை அறிந்து கொள்வோம். அந்த வகையில் புத்த பூர்ணிமா எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
புத்த பூர்ணிமா தேதி 2024:
புத்த பூர்ணிமா என்பது புத்த ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புத்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்த பூர்ணிமா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் புத்தரின் பிறந்தநாள் அல்லது புத்தர் தினம் என்றும் சொல்லப்படுகிறது. புத்த பூர்ணிமா ஆனது இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ,மேலும் தாய்லாந்து, சீனா, கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் திபெத் உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக புத்த பூர்ணிமா ஆனது வைகாசி மாதம் வர கூடியது. இந்த நாளானது புத்தரின் மோட்சத்தையும், பிறந்த நாளையும் குறிக்கிறது. இவை ஆண்டுதோறும் ஒரே நாட்களில் வருவதில்லை. மாதங்கள் மாறுபடும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வர கூடியதாக இருக்கிறது. இந்த ஆண்டு 2024-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.
புத்த பூர்ணிமா திதி ஆரம்பம்: மே 22, 2024, மாலை 6:47 மணிக்கு
புத்த பூர்ணிமா திதி முடிவடைகிறது: மே 23, 2024, இரவு 7:22 மணிக்கு
குளிப்பதற்கும் தானம் செய்வதற்கும் உகந்த நேரம்: மே 23 அன்று காலை 4:04 முதல் 5:26 வரை
விஷ்ணுவை வழிபட உகந்த நேரம்: காலை 10:35 முதல் மதியம் 12:18 வரை
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |