புத்தரின் நான்கு போதனைகள்

Advertisement

புத்தரின் நான்கு போதனைகள் | The Four Teachings of the Buddha in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புத்தரின் நான்கு போதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. புத்தரின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மற்றவர்களை நல்வழியில் வழிநடத்தி செல்வதாக இருக்கும். அவ்வளவு ஏன் புத்தரின் தத்துவங்கள் ஒவ்வொன்றும் மனிதனின் மனநிலையை மாற்ற கூடியதாக இருக்கும். புத்தரின் நான்கு முக்கிய போதனைகள் இருக்கிறது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் புத்தரின் நான்கு போதனைகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இனிய புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் 2024

What are The Main Teachings of Buddhism in Tamil:

புத்தரின் நான்கு போதனைகள்

கௌதம புத்தர் அவர்கள் ஞானம் பெற்ற பிறகு, தனது சீடர்களுக்கு நான்கு உயர்ந்த போதனைகளை அருளியுள்ளார். இதில், துன்பத்தைப் பற்றியும், அவர்கள் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றும் கற்றுக் கொடுத்தார். அவை பின்வருமாறு:

  1. துக்கம்
  2. ஆசை அல்லது பற்று
  3. துன்பம் நீக்கல்
  4. எட்டு நெறிகள்

மேலே கூறியுள்ள நான்கு போதனைகள் கௌதம புத்தர் கூறிய முக்கியமான போதனைகள் ஆகும்.

துக்கம்:

பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி இவை அனைத்தும் மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள். வாழ்க்கையில் துன்பம், வேதனை, அசமாதானம் என்பவை இயல்பானவை. இவற்றிலிருந்து விடுபட வேண்டும்.

ஆசை அல்லது பற்று:

துன்பத்திற்கு காரணம் ஆசை அல்லது பற்று. இவற்றை அகற்ற வேண்டும்.

துன்பம் நீக்கல்:

ஆசையை விட்டுவிடுவதே துன்பத்தை போக்குவதற்கான வழி.

எட்டு நெறிகள்:

  1. நல்ல பார்வை
  2. நல்ல எண்ணம்
  3. நல்ல பேச்சு
  4. நல்ல நடவடிக்கை
  5. நல்ல வாழ்வாதாரம்
  6. நல்ல நினைவாற்றல்
  7. நல்ல முயற்சி
  8. நல்ல செறிவு

இந்த எட்டு நெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்.

மேலே கூறியுள்ள இந்த நான்கு உண்மைகளை ஏற்று, அதனை புரிந்துகொண்டு வாழ்பவர்களே, அருகத நிலையை அடைந்தவர்கள் என பௌத்தம் கூறுகிறது.

புத்தர் ஞானம் பெற்ற இடம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement