பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா..?

Advertisement

Poorveega Sothu

பொதுவாக நாம் வேறு யாரிடமாவது சொத்து விவரங்களை பற்றி பேசும் போது மிகவும் விமர்சனமாக நம்மிடம் உள்ள சொத்துக்களை பற்றி பேசுவோம். ஆனால் மற்ற சிலர் இதற்கு எதிர்மறையாக எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அதனை பற்றி யாரிடமும் அவ்வளவு பிரபலமாக பேசவே மாட்டார்கள். அந்த வகையில் பார்த்தால் ஒற்றுமையாக உள்ள வீட்டில் கூட சொத்து என்றால் பல வியக்கத்தக்க பிரச்சனைகள் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு பார்த்தால் நிறைய நபர்களின் வீட்டில் பூர்வீக சொத்து என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. பூர்வீக சொத்து உள்ள நிறைய நபர்களுக்கு ஒரு சந்தேகமும் உள்ளது. அதாவது பூர்வீக சொத்தினை தான் செட்டில்மெண்ட் செய்யலாமா..? என்ற குழப்பமம் உள்ளது. ஆகையால் இன்று உங்களின் குழப்பத்திற்கு விடை தேடும் வகையில் பூர்வீக சொத்தினை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா.? அல்லது செய்ய முடியாதா..? என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பூர்வீக சொத்து என்றால் என்ன.?

நம்முடைய வீட்டில் வாழ்ந்த நம்முடைய மூதாதையர்கள், அதாவது பாட்டன், முப்பாட்டன் மற்றும் அவர்களுக்கும் முன்பாக வாழ்ந்த நபர்கள் என இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சேர்த்து வரும் சொத்தே பூர்வீக சொத்து எனப்படும்.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..?

பூர்வீக சொத்து யாருக்கு கிடைக்கும்:

பூர்வீக சொத்திற்கான உயில் எழுதப்பட்டு இருந்தால் அத்தகைய உயில் படியே அந்த பூர்வீக சொத்தினை சொந்தம் கொள்ளலாம்.

ஒருவேளை உயில் எழுதாமல் பூர்வீக சொத்து இருந்தால் அதனை ஒரு வீட்டில் 5 அல்லது 6 நபர்கள் இருந்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் அந்த பூர்வீக சொத்து சம பங்கில் கிடைக்கும். மேலும் இந்த முறை பெண்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்:

தான செட்டில்மெண்ட் என்பது நம்மிடம் உள்ள சொத்தினை வெளி ஒருவருக்கு கொடுக்காமல் வீட்டில் உள்ள சொந்த நபர்களுக்கே கொடுக்கும் முறை ஆகும்.

அப்படி என்றால் பூர்வீக சொத்தினை தாராளமாக தான செட்டில்மெண்ட் செய்யலாம். மேலும் இந்த பூர்வீக சொத்தினை உங்களின் பெயரில் தனி சொத்தாக மாற்றிய பிறகே தான செட்டில்மெண்ட் செய்ய முடியும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

எனவே பூர்வீக சொத்திற்கான பங்குகள் பிரித்த பிறகு அதனை அவர் பெயரில் மாற்றிக்கொண்டால் அது உங்களுக்கான தனிப்பட்ட சொத்தாக மாறிவிடும்.

தொடர்புடைய பதிவுகள் 
அப்பா சொத்து மகனுக்கா.. மகளுக்கா. யாருக்கு சொந்தம்
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..
பூர்வீக சொத்து என்றால் என்ன.. பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement