Carry Bags Scam in Shop in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நாம் அனைவருக்குமே அனைத்து தகவல்களும் தெரியுமா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும். அதேபோல் தான் நாம் அன்றடம் செய்யும் சில சிறிய சிறிய விஷயங்களில் கூட நமக்கு பெரிய அளவு நஷ்டம் ஏறபடும் என்பது கூட நமக்கு தெரியாது என்பது தான் உண்மை. அது என்னடா பெரிய அளவு நஷ்டம் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது.
நீங்கள் சிந்தனை செய்வதை விட்டுவிட்டு இன்றைய பதிவை முழுதாக படித்தால் அது என்ன தவறு அதனால் நமக்கு என்ன நஷ்டம் ஏற்படுகிறது என்பதை பற்றி எல்லாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Don’t Pay for Carry Bags in Shops in Tamil:
பொதுவாக நாம் அனைவருமே ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்காக தினமும் கடைகளை நாடி செல்வோம். அப்படி நீங்கள் ஒரு பொருளை வாங்குவதற்காக கடைக்கு செல்கிறீர்கள் அங்கு நீங்கள் வாங்கும் பொருட்களை எடுத்து செல்வதற்காக உங்களுக்கு ஒரு பை வழங்குவார்கள்.
ஒரு சில கடைகளில் அப்படி வழங்கப்படும் பைகளுக்கு அவர்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிப்பார்கள். நாமும் பல முறை இப்படி பணம் செலுத்தி இருப்போம். ஆனால் அது மிக பெரிய மோசடி அல்லது தவறு என்றால் நீங்கள் நம்புவீர்கள்.
பொதுவாக கடைகளில் நமக்கு அளிக்கப்படும் பைகளில் அந்த கடை அல்லது நிறுவனத்தின் Logo அல்லது பெயர் பொறிக்க பட்டுள்ளது என்றால் அந்த பைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த தேவை இல்லை.
ஆம் நண்பர்களே அதாவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு 12 இன் கீழ் நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்க நுகர்வோருக்கு உரிமை உண்டு. மேலும் பிரிவு 2(1)(R)-ன் படி நமக்கு அளிக்கப்படும் Logo அல்லது பெயர் பொறிக்க பட்டுள்ள பைகளை வழங்குவது மிக பெரிய தவறு ஆகும்.
Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து காச கட்டாதீங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |