Castor Oil in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் விளக்கெண்ணெய் பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே விளக்கெண்ணய் பயன்படுத்தி இருப்போம். ஆனால் விளக்கெண்ணெய் எதில் இருந்து செய்யப்படுகிறது, என்று விளக்கெண்ணெய் பற்றிய முழு தகவலும் நமக்கு தெரியுமா என்றால், கண்டிப்பாக தெரியாது. அதன் காரணமாக தான் இந்த பதிவின் வாயிலாக விளக்கெண்ணெய் பற்றிய முழு தகவல்களையும் கூறியுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் மட்டும் போதாது.. இந்த விஷயம் தெரிஞ்சிருக்கணும்..
Castor Oil பற்றிய தகவல்:
Castor Oil அதாவது விளக்கெண்ணெய் என்பது ஆமணக்கு விதைகளில் (Ricinus Communis) இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். இந்த விளக்கெண்ணெயில் நாம் பயன்படுத்தும் மற்ற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக விளக்கெண்ணெய் ஆனது பிசுபிசுப்புடன் இருக்கிறது.
இந்த விளக்கெண்ணெயின் கொதிநிலை 313 °C (595 °F) மற்றும் அதன் அடர்த்தி 0.961 g/cm 3 ஆகும். இது ட்ரைகிளிசரைடுகளின் கலவையை உள்ளடக்கியது ஆகும். இதில் 90% கொழுப்பு அமிலங்கள் ரிசினோலேட்டுகள் உள்ளன.
விளக்கெண்ணெய் அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயில் பால்மிடிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம், ரிசினோலிக் அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன. இந்தியா, பிரேசில் மற்றும் சீனா ஆமணக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக இருக்கின்றன. இவ்வுலகில் ஆமணக்கு எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா 90% பங்கு வகிக்கிறது. உலக இரசாயனத் தொழிலில் ஆமணக்கு எண்ணெய் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயின் பண்புகள்:
ஆமணக்கு எண்ணெய் என்று சொல்லக்கூடிய விளக்கெண்ணெய் பல்வேறு பண்புகளை கொண்டுள்ளது. அவை,
- இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- இது சுத்திகரிப்பு (மலமிளக்கி) செயல்பாட்டைக் காட்டுகிறது.
- இது எதிர்பார்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
- இது ஹெபடோப்ரோடெக்டிவ் (கல்லீரல் பாதுகாப்பு) பண்புகளைக் கொண்டுள்ளது.
- இது புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
- இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
விளக்கெண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ஒரு டேபிள்ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் கீழ் கூறப்பட்டுள்ள சத்துக்கள் அடங்கும்.
- கலோரிகள் – 120
- புரதம் – 0 கிராம்
- கொழுப்பு – 14 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள் – 0 கிராம்
- ஃபைபர் – 0 கிராம்
- சர்க்கரை – 0 கிராம்
மேலும் இந்த விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், விளக்கெண்ணெயில் இருக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
விளக்கெண்ணெய் வீட்டிலேயே செய்வது எப்படி..?
நாம் விளக்கெண்ணெயை மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே தயார் செய்யலாம்.
அதற்கு நீங்கள், ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி அவற்றை உரலில் இட்டு நன்கு இடித்து கொள்ள வேண்டும். இப்போது அது பசை போல இருக்கும்.
பின் ஒரு பானையை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் தண்ணீர் கொதித்தவுடன் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளர வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும். அதனைச் சிறிது சிறிதாகக் கரண்டியால் எடுத்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.
பின் சேகரித்த எண்ணெயில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். ஆகவே எண்ணெயை ஒரு வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். இப்போது நீர் முழுவதுமாக வற்றிய பின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இயற்கையான முறையில் விளக்கெண்ணெய் தயார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |