கட்லா மீன் | Catla Fish in Tamil
ஹாய் வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கட்லா மீன் பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த கட்லா மீன் ஆனது அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிடப்படும் ஒருவகையான மீனாகும். இந்த கட்லா மீன்களில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் இந்த மீனுடைய தோற்றங்கள் எப்படி இருக்கும் என்றும் , இவை எங்கு அதிகமாக இருக்கிறது என்றும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஹெர்ரிங் மீன்கள் பற்றிய சில அற்புதமான தகவல்கள் |
கட்லா மீன் உடல் அமைப்பு:
இந்த கட்லா மீன் ஆனது கெண்டை வகையை சேர்ந்த ஒருவகையான மீனாகும். இதனுடைய வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். அதாவது மிகவும் வேகமாக வளர கூடிய மீனாகும். இது ஒரு நன்னீர் மீனாகும்.
இந்த மீன்கள் பொதுவாகவே 45 கிலோ எடையுடன் இருக்கும். ஒரு கட்லா மீன் 5 அடி வரை நீளமாக இருக்கும். கட்லா மீனானது மிக பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும் கொண்டவையாகும்.
இம்மீன்கள் அகன்ற உடல் அமைப்பை கொண்டவையாகும். இந்த மீனின் வெளிப்புற தோலின் நிறமானது சாம்பல் நிறமும், வெள்ளை நிறமும் கலந்து இருக்கும்.
கட்லா மீன் பற்றிய தகவல்:
இந்த கட்லா மீன்கள் பொதுவாக ஏரி, குளம், ஆறு, மற்றும் வீடு போன்றவற்றில் வளர்க்கப்பட்டு உணவாகவும் சாப்பிடப்படுகிறது. இவை நீரில் மேல் பரப்பில் இருக்கும் நுண்ணுயிரிகளை சாப்பிட்டு வளரப்படுகிறது.
கட்லா மீன்கள் அதிகமான எண்ணெய்களை கொண்டவையால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது. இந்த கட்லா மீனில் இருக்கும் சிங்க் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
இவை சாப்பிடும் நுண்ணுயிரிகளை சலிப்பதற்கு வசதிக்கேற்ப அதனுடைய செவில் கதிர்கள் அடர்த்தியாக இருக்கிறது. இவை இயற்கை உணவுகளை உண்ணாமலே 1.5 கிலோ எடை வரையும் வளர கூடியவையாகும்.
இந்த கட்லா மீன்கள் பொதுவாக பருவமழை காலங்களில் இனபெருக்கம் செய்யக்கூடியவையாகும். அதோடுமட்டுமின்றி இவை தூண்டுதல் முறையில் அதிகப்படியான மீன் குஞ்சிகளையும் உற்பத்தி செய்கிறது.
பொதுவாகவே இந்த கட்லா மீன்கள் மட்கிய உணவுகளை மட்டும் உணவாக அதிகம் எடுத்துக்கொள்ளும். ஆரோக்கியம் நிறைந்த கட்லா மீன்கள் கடல் பகுதில் அதிகமாக கிடைக்கின்றன.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |