Ceiling Fan vs Table Fan Which is Better
நம் முன்னோர்களின் காலத்தில் மின்சார வசதியே இல்லாமல் இருந்தது. அவர்கள் விளக்கையும், விசிறியையும் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் விசிறியை பயன்படுத்தி வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது. ஏனென்றால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனால் நாமும் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றோம். பேன், ஏர் கூலர், ஏசி என்று பல வசதிகள் இருக்கிறது. இவை அனைத்துமே எல்லாரும் வீட்டிலும் இருக்காது. ஒருவர் வீட்டில் எல்லாமே இருக்கும், சிலர் வீட்டில் பேன் மட்டும் தான் இருக்கும். இந்த பதிவில் நாம் சீலிங் பேன், டேபிள் பேன் இவற்றில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
சீலிங் பேன் vs டேபிள் பேன்:
காற்று:
சீலிங் பேன் எந்த இடத்தில் மேலே வைத்திருக்கிறீர்களோ அந்த அறை முழுவதும் காற்றை தரும். ஆனால் டேபிள் பேன் கீழே வைக்கும் போது அந்த இடத்தில் மட்டும் தான் காற்றை தரும். ஆனால் இதில் இரண்டில் டேபிள் பேனிலுருந்து வரும் காற்றானது குளிர்ச்சியை தர கூடியது.
இடம் மற்றும் அழகு:
சீலிங் பேனை அறைக்கு தகுந்தது போல் அழகாக வாங்கி கொள்ள முடியும்.இவை இடத்தையும் அடைத்து கொள்ளாது. ஆனால் சீலிங் பேனை ஒரு இடத்தில் தனியாக வைக்க வேண்டியிருக்கும்.
மர பீரோல் VS இரும்பு பீரோல் இரண்டில் எது சிறந்தது.?
பாதுகாப்பு:
சீலிங் பேன் பாதுகாப்பானதாக இருக்கும். ஏனென்றால் அவை யார் கைக்கும் எட்டாத வகையில் இருக்கும். டேபிள் பேன் சரியாக வைக்கா விட்டால் பாதுகாப்பானதாக இருக்காது. குறிப்பாக குழந்தைகள், செல்ல பிராணிகள் போன்றவற்றிற்கு ஆபத்தாக முடியலாம்.
செலவு:
சீலிங் பேன் விலை அதிகமானதாக இருக்கும், மேலும் இதை வீட்டில் செட் செய்வதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறார்கள். ஆனால் டேபிள் பேன் விலை குறைவாக இருக்கும். இதனை செட் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆற்றல்:
சீலிங் பேன் ஏசியை போலவே அறை முழுவதும் காற்றை பரப்பி அறையை குளிர்விக்க கூடியது, ஆனால் டேபிள் பேன் அந்த இடத்தை மட்டும் குளிர்விக்கும்.சீலிங் பேனை விட டேபிள் பேனுக்கு ஆற்றல் குறைவாக இருக்கும்.
உங்களுடைய இடம் சிறியதாக இருந்து, குறைந்த விலையில் பேன் வாங்க வேண்டுமென்றால் டேபிள் பேன் சிறந்ததாக இருக்கும். நீங்கள் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சீலிங் பேன் சிறந்ததாக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட Vs ஸ்டீல் கதவு இரண்டில் வீட்டிற்கு எது சிறந்தது..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |