Cement Floor or Tiles
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்வது போல் மனிதனின் ஆசையும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய ஆசையாக சொந்தமாக வீடு கட்டுவது இருக்கிறது. இப்படிப்பட்ட கனவு வீட்டை ஏனோ தானோ என்று கட்ட மாட்டார்கள். வீடு கட்ட பயன்படுத்தப்படும் கல், சிமெண்ட், கம்பி போன்றவை விலை உயர்ந்ததாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் வீட்டிற்கு அழகை கொடுக்க கூடியது பெயிண்ட் இரு புறம் இருந்தாலும் மறுபுறம் தரை முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் சிமெண்ட் தரை VS டைல்ஸ் தரை இவற்றில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிமெண்ட் தரை:
நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே சிமெண்ட் தரை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வரும் சிமெண்ட் தரையை விரும்புவதில்லை.
சிமெண்ட் தரையில் தண்ணீர் ஊற்றினால் நாம் கால் வைக்கும் போது வழுக்கி விடாது.
மேலும் சிக்கனமாக வீட்டை கட்ட வேண்டும் என்பவர்களுக்கு சிமெண்ட் தரை உகந்தது. ஏனென்றால் இதனை பயன்படுத்துவதற்கு குறைந்த அளவே பணம் தேவைப்படும்.
சிமெண்ட் தரை கொஞ்ச வருடத்திற்கு பிறகு வெடிப்பு விழ ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் மறுபடியும் சிமெண்ட் தரை போட வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் அழுக்கு, தூசி சேர்ந்து தரை பழையது போல் காட்சியளிக்கும். மேலும் இதனை அடிக்கடி பெருக்க வேண்டியிருக்கும். தண்ணீர் ஊற்றி அலச வேண்டியிருக்கும்.
டைல்ஸ்:
டைல்ஸ் இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்கள் அதிகம் விருப்புகிறார்கள். ஏனென்றால் வீட்டை அழகாகவும், மாடனாகவும் காட்டுகிறது.
டைல்ஸில் பல வண்ணங்கள், மாடல்கள் உள்ளது, நமக்கு எது விருப்பமோ அது போல் வாங்கி கொள்ளலாம்.
டைல்ஸில் தண்ணீர் பட்டால் தெரியாது, அதனால் நாம் கீழே விழுவதற்கு வாய்புகள் இருக்கிறது.
இதில் அழுக்கு மற்றும் தூசி இருந்தால் தெரியாது. அதனால் இதை அடிக்கடி கூட்ட வேண்டிய அவசியமில்லை. அது போல இதனை தண்ணீர் ஊற்றி அலசி விட தேவையில்லை. மாப் போட்டால் போதுமானது.
மேலும் நீங்கள் வீடு கட்டும் போது ஒரு முறை மட்டும் பதித்தால் போதும், காலத்திற்கும் அப்படியே இருக்கும்.
மேல் கூறியுள்ள நன்மை மற்றும் தீமை இரண்டையும் வைத்து பார்க்கும் போது டைல்ஸ் தான் சிறந்தது.
வீட்டின் சுவர் மற்றும் தரையை சட்டுனு கிளீன் செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |