Chetak Urbane 2024 Specifications
பொதுவாக பைக் மற்றும் கார் என இவற்றில் எது புதியதாக வாங்கினாலும் அது எவ்வளவு மைலேஸ் கொடுக்கும் என்பதை பார்த்து பின்பு தான் வாங்குவார்கள். ஏனென்றால் காரும் சரி, பைக்கும் சரி மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ வாங்கும் பொருள் கிடையாது. ஆகையால் அதனை நன்கு கவனித்து வாங்குவது தான் சிறந்தது. ஆனால் இப்போது எல்லாம் இந்த காலக்கட்டம் அனைத்தும் மாறிக்கொண்டே போகிறது.
அதாவது பலரும் எது சிறந்த மாடலாக இருக்கும், மேலும் தற்போதைய நிலைப்படி எது சிறந்த டிரெண்ங்காக இருக்கும் என்பதை பார்த்து தான் வாங்க விரும்புகிறார்கள். அப்படி பார்த்தால் தற்போது மக்கள் விரும்பும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதல் பெட்ரோல் பைக்குகள் என பல வகையான பைக்குகள் புதிய முறையில் கண்ணை கவரும் வகையில் அறிமுகம் ஆகி வருகிறது. ஆகவே இன்று இதில் ஒன்றாக விரைவில் அறிமுகம் ஆக உள்ள பஜாஜ் நிறுவனத்தின் Chetak Urbane எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முழு விவரங்களைக்காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chetak Urbane எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சம்:
பஜாஜ் நிறுவனம் பல வகையான பைக்குகளை அறிமுகம் செய்து உள்ள நிலையில் தற்போது மற்றொரு புதிய அம்சமாக Chetak Urbane எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024-ஆம் ஆண்டின் புதிய மாடலாக அறிமுகம் செய்ய இருக்கிறது.
அந்த வகையில் Chetak Urbane எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 2.9kWh என்ற பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் இது LED ஹெட்லைட் அம்சத்தினையும், வளைந்த பாடி பேனல்கள் அம்சத்தினையும் கொண்டிருக்கிறது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் TecPac என்ற நவீன அம்சத்தினை கொண்டிருப்பதனால் 73kmph என்ற அதிகப்பட்ச வேகத்தை அதிகரிக்க செய்கிறது.
இதர முக்கிய அம்சம்:
- சார்ஜிங் முறை: 4 மணி நேரம் 50 நிமிடம்
- எரிபொருள்: மின்சாரம்
- செல்லும் வேகம்: 73 கிலோ மீட்டர்
- அமரும் இருக்கை: ஒன்று
- ஸ்டார்ட் செய்யும் முறை: பட்டன்
- ஹெட் லைட்: LED
- வெளியீடு: விரைவில்
இப்படிப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் உடன் இருக்கையில் 113 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
மேலும் அர்பேன் டிரிம் 650W ஆனது சேடக் பிரீமியத்தில் 800W ஒரு சார்ஜரில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஸ்கூட்டரின் இதர வண்ணம்:
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 4 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.
- Brooklyn Black
- Cyber White
- Indigo Metallic
- Matte Coarse Grey
இந்தியாவில் விலை எவ்வளவு..?
பல வகையான அம்சங்களை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ஆனது தோராயமாக 2024-ஆம் ஆண்டில் 1,15,001 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கப்படும் என்று பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது.
பைக் வாங்கணும்னு நினைக்கிறவுங்க கூட இந்த ஸ்கூட்டர் வந்த உடனே வாங்கிடுவாங்க.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |