குழந்தைகள் தின கவிதைகள் தமிழ் | Children Day Kavithai in Tamil..!
பொதுவாக நவம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் இரண்டு விசயம் நினைவிற்கு வரும். அதில் ஒன்று தீபாவளி மற்றொன்று குழந்தைகள் தினம் தான். அந்த வகையில் தீபாவளி பெரும்பாலும் நவம்பர் மாதத்தில் தான் வரும். எப்போதாவது தான் அக்டோபர் மாதத்தில் வரும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தீபாவளி முடிந்த ஓரிரு நாட்களிலே இந்த வருடத்திற்கான குழந்தைகள் தினவிழா வருகிறது. இவ்வாறு வருடந்தோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினமானது நேருவின் பிறந்த நாளே ஆகும். அதாவது நேருவின் பிறந்த நாளையே தமிழகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே குழந்தைகள் தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்று குழந்தைகள் தின கவிதை வரிகளை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குழந்தைகள் தின கவிதைகள்:
குழந்தைகளே குழந்தைகளே..!
இன்றைய நாட்டின்
இளவரசர்களே..!
நாளைய
சிம்மாசனங்களின்
சொந்தக்காரர்கள் நீங்கள்
நாளைய சிகரங்களின்
கிரீடங்கள் நீங்கள்…
நீங்கள்
நாளைய வனத்துக்கான
இன்றைய விதைகள்…
நாளைய கடலுக்கான
இன்றைய துளிகள்
செதுக்குவதைப் பொறுத்து தான்
சிலைகள் வடிவாகும்…!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு
குழந்தைகளை கொண்டாடுவோம் கவிதை:
நீங்கள் வானத்தையும் வனையும்
வல்லமை படைத்தவர்கள்
விரல்களை டிஜிட்டல் கருவிகளில்
ஒட்டி வைக்க வேண்டாம்.!
கீழ்ப்படி இல்லாமல்
மேல்படி இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை
கீழ்ப்படியுங்கள்…
பொய்யின் பிள்ளைகள் வெற்றிகளின்
கிளைகளில் கூடுகட்டுவதில்லை
வாய்மையை
வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.!
Children Day Kavithai in Tamil:
நாட்டின் வருங்கால சிற்பிகள் தான் குழந்தைகள்
அந்த வகையில் வருங்கால
செல்வங்களாகவும், சிறப்பாங்களாகவும் ஜொலிக்கும்
இவ்வுலக குழந்தைகள் அனைவருக்கும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..!
குழந்தைகளின் தின கவிதை வரிகள்:
இந்த உலகத்தை ஒளிரட்ச் செய்யும்
ஒளி நீங்கள், உங்கள் எதிர்காலம்
பிரகாசமாக இருக்கட்டும்.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |