Chithirai Puthandu Lyrics in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து பாடல் பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக தமிழர்களின் முதன்மை பண்டிகையாக தமிழ் புத்தாண்டு இருக்கிறது. பொதுவாக சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், பிரம்ம தேவர் இந்த நாளில் தான் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும், தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தான் சித்திரை புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனால் தமிழர்களின் முதன்மை பண்டிகையாக சித்திரை புத்தாண்டு இருக்கிறது. சரி இந்த பதிவின் வாயிலாக சித்திரை திருநாள் வாழ்த்து பாடல் பற்றி பார்க்கலாம் வாங்க..!
தமிழ் புத்தாண்டு என்பதன் வேறு பெயர்கள் என்ன தெரியுமா..
சித்திரை திருநாள் வாழ்த்து பாடல் வரிகள்:
பொதுவாக தமிழ் புத்தாண்டு என்று தமிழர்களுக்கு சிறப்பான பண்டிகையாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி வீட்டை பூக்களால் அலங்கரித்து சைவ உணவு சமைத்து இறைவனை வழிபடுவார்கள்.
அதுபோல பள்ளிகளிலும் தமிழ் புத்தாண்டை ஒட்டி பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அந்த வகையில் குழந்தைகள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து பாடல்கள் பற்றி தெரிந்து கொண்டு அதை நிகழ்ச்சியில் பாடுவதற்காக நம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து பாடல் பற்றி இங்கு கூறியுள்ளோம்.
இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்
எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே
ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை
இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே
ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா..!
தமிழ் புத்தாண்டு 2024 தேதி மற்றும் நேரம்..
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |