கிறிஸ்துமஸ் பாடல் வரிகள் | Christmas Song lyrics in Tamil
Christmas Song lyrics in Tamil – பொதுநலம்.காம்-யின் வணக்கம் ஆண்டு தோறும் டிசம்பர் 25-ஆம் நாளன்று கிருத்துமஸ் பண்டிகையினை உலகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றன. கிருத்துமஸ் பண்டிகை இயேசு பிறப்பிற்க்காக கொண்டப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் கிருஸ்துமஸ் நாளன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் இயேசுவை மனதில் நினைத்து பாடி மகிழ்ந்திட கிறிஸ்துமஸ் பற்றிய பாடல் வரிகளை பதிவு செத்துள்ளோம். படித்து பயன்பெறுங்கள் நன்றி..
கிறிஸ்துமஸ் பற்றிய பல பாடல்கள் உள்ளது. எனவே, கிறிஸ்துமஸ் அன்று பாடவேண்டிய பாடல்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
1 பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாடல் வரிகள் – Christmas Song lyrics in Tamil:
முதலாவதாக நாம் பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாடல் வரிகளை பாடி மகிழ்ந்திடுவோம்.
பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
(அல்லது)
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க
அவரே வெளிச்சம் அவரே சத்தியம்
அவரே நித்தியம் அவரே நிச்சயம்
மண்ணில் சமாதானம் விண்ணிலும்
மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்
2 இம்மானுவேல் இம்மானுவேல் பாடல் வரிகள் – Immanuel Song Lyrics in Tamil:
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2
மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2
மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
3 கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே பாடல் வரிகள் – Christmas Song lyrics in Tamil:
ல ல ல லல லலை ல ல ல லை
ல ல ல லலை லலை லை
ல ல ல லல லலை ல ல ல லை
லல்ல லால லால ல ல ல லை – 2
கிறிஸ்துமஸ் என்றால்
கொண்டாட்டமே
ஆடிப்பாடி
மகிழும் நாட்களே
ஒன்றாகக் கூடியே
கரங்களைத் தட்டியே
இயேசுவைக் கொண்டாட வாங்களே
கிறிஸ்துமஸ் என்றால்
கொண்டாட்டமே
ஆடிப்பாடி
மகிழும் நாட்களே
ஒன்றாகக் கூடியே
கரங்களைத் தட்டியே
இயேசுவைக் கொண்டாட வாங்களே
ல ல ல லல லலை ல ல ல லை
ல ல ல லலை லலை லை
ல ல ல லல லலை ல ல ல லை
லல்ல லால லால ல ல ல லை
வாழ்க்கை எல்லாம்
செழிப்பாகுமே
இயேசு இன்று
பிறந்ததாலே
நம் வாழ்க்கை மாறுமே
புது வழி திறக்குமே
இயேசு இங்கு வந்ததினாலே
வாழ்க்கை எல்லாம்
செழிப்பாகுமே
இயேசு இன்று
பிறந்ததாலே
நம் வாழ்க்கை மாறுமே
புது வழி திறக்குமே
இயேசு இங்கு வந்ததினாலே
ல ல ல லல லலை ல ல ல லை
ல ல ல லலை லலை லை
ல ல ல லல லலை ல ல ல லை
லல்ல லால லால ல ல ல லை
கொடிய வியாதி
பறந்து போகுமே
யெகோவா ராப்பா
என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே
மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே
கொடிய வியாதி
பறந்து போகுமே
யெகோவா ராப்பா
என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே
மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே
ல ல ல லல லலை ல ல ல லை
ல ல ல லலை லலை லை
ல ல ல லல லலை ல ல ல லை
லல்ல லால லால ல ல ல லை – 2
4 பெத்தலையில் பிறந்தவரை கிறிஸ்தவ பாடல்:
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்
இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்
5 வான் வெள்ளி பிரகாசிக்குதே lyrics
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |