Cloves in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அது என்ன தகவல் என்றால் நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருளான கிராம்பு பற்றிய தகவல்கள் தான். அது என்ன கிராம்பு பற்றிய என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதாவது நாம் அனைவருமே நாம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் இந்த கிராம்பினை ஒரு முக்கியமான மசாலா பொருளாக பயன்படுத்தி இருப்போம். ஆனால் இதனை பற்றிய முழு விவரங்களும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
அதாவது அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், மற்றும் இதனை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அப்படி உங்களுக்கு கிராம்பு பற்றி மேலே கூறியுள்ள இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி நண்பர்களே பதிவினுள் செல்லலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Cloves Information in Tamil:
கிராம்பு என்பது ஒரு மருத்துவ மூலிகை தாவரம் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். மேலும் மிர்டேசி ( Myrtaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. இது பெரும்பாலான சமையலில் மிகவும் முக்கியமான நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பின் மொட்டு, இலை மற்றும் தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நமது ஆரோக்கியத்திற்கு பல வகையான நன்மைகளை செய்கின்றன.
பிறப்பிடம்:
இந்த கிராம்பின் பிறப்பிடம் என்று இந்தோனேசியா தான் கூறப்படுகிறது. அதனால் இது இந்தோனேசியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டாலும் இந்தியா, இலங்கை முதல் உலகமெங்கும் பயிரிடப்படுகிறது.
பைன் பீன்ஸை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
வேறுபெயர்கள்:
இந்த கிராம்பிற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி மற்றும் வராங்கம் என்ற வேறு பெயர்களும் உண்டு. மேலும் இதனை ஆங்கில மொழியில் கிலோவ் (Clove) என்றும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
பொதுவாக கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பயன்கள்:
இந்த கிராம்பினை பயன்படுத்துவதால் நமது வாயில் வரும் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்வைக் அளிக்கிறது. அதனால் தான் இதனை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.
மேலும் பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை மற்றும் வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் இது பயன்படுகிறது.
இந்த கிராம்பு வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தின் சுரப்பை சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
மேலும் கிராம்பு உடலில் உள்ள இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கிராம்புப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
அதேபோல் நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்து பருகினால் காலரா குணமடையும்.
Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |