சேப்பக்கிழங்கினை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Colocasia in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது நாம் அன்றாடம் பலவகையான உணவுப்பொருட்களை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதாவது நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள் மற்றும் இதனை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அதேபோல் தான் நம்மில் பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் சேப்பக்கிழங்கினை பற்றி மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கு சேப்பக்கிழங்கினை பற்றி மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் தெரியும் என்றால் பரவாயில்லை. மாறாக தெரியாது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Colocasia Information in Tamil:

Colocasia Information in Tamil

சேப்பக்கிழங்கு அல்லது சேம்பு என்பது பூக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு வித்திலை தாவரமாகும். இந்த சேப்பக்கிழங்கு தாவரமானது அரேசியா (Araceae) என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.

இது ஒரு மூலிகை தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் கிழங்கினை உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் இதன் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது.

இதன் இலைகள் 40×24.8 செ.மீ அளவுடைய முக்கோண முட்டை வடிவம் உடையது. இலையின் மேற்பரப்பு கரும்பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி இளம்பச்சை நிறமாகவும் இருக்கும். இதன் பாளை 25 செ.மீ. நீளமுடையது.

கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க

பிறப்பிடம்:

இந்த சேப்பக்கிழங்கு அல்லது சேம்பின் பிறப்பிடம் மலேசியாவின் சதுப்பு நிலங்கள் ஆகும். காலப்போக்கில் தென்கிழக்கு ஆசியா, இந்திய துணை கண்டம், எகிப்து, ரோம், கிரேக்க நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதியிலும் பயிரிடப்படுகிறது.

வேறுபெயர்கள்:

இந்த சேப்பக்கிழங்கானது சேம்பு, கொலகேசியா எஸ்குலெண்டா, டாரோ, எடோ, மலங்கா போன்ற வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்:

Colocasia details in Tamil

சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் என்னும் Vitamin B-9 அதிக அளவில் உள்ளது. அதேபோல் இதில் மெக்னீசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்களும் சரியான அளவில் நிறைந்துள்ளது.

சவ்வரிசியை சாப்பிட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க

பயன்கள்:

சேப்பக்கிழங்கினை தொடர்ந்து நமது உணவில் சேர்த்து கொள்வதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

உடல் எடையை குறைக்க பயன்படும்.

செரிமான பிரச்சினைகள் போக்கும்.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும்.

நமது உடலில் உள்ள தசைகள் வலுப்பெற உதவுகிறது.

சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement