சைவம் என நினைத்து நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் எது தெரியுமா..?

Advertisement

Non-Veg Foods You Think Are Veg in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சைவம் என்று நினைத்து நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பெரும்பாலும் சிலர் அசைவத்தை விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் சைவ உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் சிலர் சைவம், அசைவம் என்று இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். இருந்தாலும் நாம் இன்னும் சைவ உணவுகள் என்று நினைத்து சில அசைவ உணவுகளை சாப்பிடுகிறோம். அது என்ன உணவுகள் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..!

சைவம் என நினைத்து நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் எது..? 

நாம் சில உணவுகள் சைவம் என்று நினைத்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அந்த உணவுகள் அசைவம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? நாம் உணவுக்கு பயன்படுத்தும் உப்பிலிருந்து அரிசி வரை கலப்படம் செய்வதன் மூலம் அது அசைவமாக மாறுகிறது. அந்த உணவுகளை பற்றி இங்கு பார்ப்போம்.

வெள்ளை சர்க்கரை: 

வெள்ளை சர்க்கரை

பெரும்பாலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் வெள்ளை சர்க்கரையும் ஓன்று. இந்த வெள்ளை சர்க்கரையை நாம் சைவம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் வெள்ளை சர்க்கரை அசைவம் என்று உங்களுக்கு தெரியுமா..?

 வெள்ளை சர்க்கரையை சுத்தப்படுத்தி பாலிஷ் செய்வதற்கு எலும்புக் கரியை பயன்படுத்துகின்றனர். அதனால் வெள்ளை சர்க்கரை அசைவ உணவாக கருதப்படுகிறது. 

சாலட்:

சாலட்

சைவ பிரியர்கள் அனைவரும் சாலட் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அது அசைவம் என்று உங்களுக்கு தெரியுமா..? சாலட் செய்யும் போது சுவைக்காக உள்ள கலக்கப்படும் ஜாஸ் பயன்படுத்தப்படுகிறது.

அந்த ஜாஸ் செய்வதற்கு அதில் முட்டை கலக்கப்படுகிறது. அதனால் அதை பயன்படுத்தி செய்யும் சாலட் அசைவ உணவாக பார்க்கப்படுகிறது.

சீஸ்:

சீஸ்

இன்றைய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருள் தான் சீஸ். நாம் சாப்பிடும் சில உணவுகளில் இந்த சீஸ் தான் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.

இந்த சீஸ்களில் ரென்னட் என்சைம் என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த என்சைம் என்ற பொருள் விலங்குகளின் குடலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் சீஸ் அசைவ உணவு என்று சொல்லப்படுகிறது.

சூப்:

 what we think of as vegetarian are non-vegetarian foods in tamil

காய்கறிகளை கொண்டு செய்த சூப் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அந்த சூப்களில் மீனை வைத்து தயாரிக்கக் கூடிய மீன் சாஸ்கள் கலக்கப்படுகின்றன. அதனால் காய்கறிகளை கொண்டு செய்ய கூடிய சூப்கள் கூட அசைவ உணவாக கருதப்படுகிறது.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்னவென்று தெரியுமா?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement