Coriander Leaves in Tamil
உணவுகளில் வாசனையாகவும், ருசிக்காகவும் மசாலா பொருட்களை பயன்படுத்துவோம். அதில் இயற்கையாகவே கிடைக்க கூடியதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ போன்றவை இருக்கிறது. அது போல இலைகளில் கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை போன்றவை இருக்கிறது. இவை அனைத்தும் வீட்டிலையே வளர்க்க கூடியது. உடலிற்கு நல்லது, சத்துக்கள் உள்ளது, இது ஒரு செடி வகை, உணவில் சேர்த்தால் வாசனையாக இருக்கும் என்று தெரியும். இதன் தாண்டி வேறு ஏதும் தெரியவில்லை என்றால் இந்த முழு பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. வாங்க கொத்தமல்லி இலையை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கொத்தமல்லி இலை பற்றிய தகவல்:
கொத்தமல்லி உணவில் வாசனைக்காகவும், ருசியாகவும் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது.
இதனை கொத்தமல்லி அல்லது மல்லி இலை என்று அழைக்கப்படும். இது ஒரு அபியேசியே தாவர குடும்பத்தை சேர்ந்தது. கொத்தமல்லி செடியானது 50 CM வளர கூடிய சிறு செடியாக இருக்கிறது.
கொத்தமல்லி என்ற வார்த்தை ஸ்பானிஷ் வந்த வார்த்தையாகும்.
வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!
சத்துக்கள்:
கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
சாகுபடி:
கொத்தமல்லி விதையை வெயில் குறைவாக உள்ள இடத்தில் குழியை தோண்டி விதையை விதைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
விதை விதைத்த 20 வது நாள் அல்லது 35 வது நாளில் களை எடுக்க வேண்டும்.
செடியை விதைத்து 40வது நாள் அல்லது 50 வது நாட்கள் அறுவடை செய்ய வேண்டும்.
என்னென்ன செய்யலாம்:
கொத்தமல்லி இலைகள் மற்றும் வேர்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. இலைகளை சட்னி செய்யலாம், ரசம் மற்றும் குழம்பில் சேர்க்கலாம்.
வேர்களையும் ரசம், குழம்பு, பிரியாணி, கூட்டு போன்றவற்றில் சேர்க்கலாம்.
Jowar பற்றிய சில அற்புதமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |