கொத்தமல்லி விதை பற்றிய தகவல் | Coriander Seeds in Tamil..!

Advertisement

Coriander Seeds in Tamil 

பொதுவாக நாம் தினமும் உணவு சாப்பிடும் போது அந்த உணவின் சுவையினை நன்றாக ரசித்தும், ருசித்தும் தான் சாப்பிடுவோம். அதன் பிறகு இந்த உணவினை மற்றொரு முறையிலும் சமைத்து இருக்கலாம் என்ற கூறுவோம். ஆனால் அந்த பொருள் எதில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும், அதில் உள்ள சத்துக்கள் என்ன என்றும் சிந்தித்து பார்ப்பது இல்லை. ஒருவேளை ஒன்றில் இரண்டு நபர்கள் சிந்தித்தாலும் கூட அதற்கான தேடலை சரியாக தேடுவது இல்லை. அதனால் இன்றைய பதிவில் நாம் அனைவரும் அதிகமாக கேள்வி பட்டிருக்கும் கொத்தமல்லி விதைகள் பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் நேரத்தை வீணடிக்காமல் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி விதை பற்றிய தகவல்:

 information about coriander seeds in tamilநாம் அனைவருக்கும் தெரிந்த கொத்தமல்லி விதை ஆனது ஒரு சிறந்த மூலிகை செடியாகும். மேலும் இது மல்லி விதை மற்றும் தனியா விதை என்றும் அழைக்கப்படுகிறது.

இது அபியேசியே என்ற குடும்பத்தினை சார்ந்த இருவித்திலை தாவரம் ஆகும். மேலும் கொத்தமல்லி விதை ஆனது இந்தியாவில் தான் அதிகமாக பயிர்ப்படுகின்றது.

 

இத்தகைய செடி ஆனது 50 செமீ உயரம் வரை வளரக்கூடிய ஒரு செடி ஆகும். இதில் உள்ள பூக்கள் வெள்ளை, வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள இதழ்கள் ஆனது 5 முதல் 6 மிமீ வரை வளரக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்தியாவில் பெரும்பாலும் பயிரிடப்பட்டாலும் கூட மேற்கு ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் பயிரிடப்படுகிறது. அதேபோல் இந்த கொத்தமல்லி என்ற வார்த்தை ஆனது பிரெஞ்சில் வார்த்தையில் இருந்து தோன்றிய பழமையான வார்த்தை ஆகும்.

இதில் இருந்து வரும் கொத்தமல்லி விதை மற்றும் கொத்தமல்லி இலை தான் தினமும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

வல்லாரை கீரை சாப்பிடுவீர்கள் என்றால் இதை தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க..

கொத்தமல்லி விதையில் உள்ள சத்துக்கள்:

  1. வைட்டமின் A
  2. புரதம்
  3. பாஸ்பரஸ்
  4. பொட்டாசியம்
  5. மெக்னீசியம்
  6. கால்சியம்
  7. இரும்புசத்து
  8. கார்போஹைட்ரேட்
  9. கொழுப்புகள்
  10. துத்தநாகம்
  11. சோடியம்
  12. கலோரிகள்

மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் இல்லாமல் இதர சில சத்துக்களும் கொத்தமல்லி விதையில் நிறைந்து இருக்கிறது.

பயிரிடும் முறை:

 கொத்தமல்லி விதை

1 ஏக்கர் நிலத்தில் கொத்தமல்லி பயிரிடுவதற்கு தோராயமாக 12 முதல் 15 கிலோ வரை விதைகள் தேவைப்படுகிறது. அதன் பின்பு நிலத்தினை நன்றாக உழுது தொழு உரம் கொடுத்து கடைசியாக விதைகளை நட வேண்டும்.

நடவு செய்த பிறகு 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது 4 நான்கு நாட்களுக்கு ஒரு முறை என மொத்தம் 40 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் சொட்டுநீர் முறையில் தான் நீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும் இதனை நடவு செய்த 20 அல்லது 35 நாட்களில் கலைகளை எடுக்க வேண்டும். இத்தகைய பயிரிடும் முறை ஆனது தட்பவெப்ப நிலை காணப்படும் இடங்களில் தான் பயிர்ப்படுகிறது.

கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement