இந்திய ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்

Advertisement

Countries With Lower Currency Value Than Indian Rupee List in Tamil..!

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு அருமையான பதிவை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்களை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். அதாவது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 77.50  ரூபாயாக இருக்கும் அதே நேரத்தில், ஒரு சில நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த நாடுகளை எவை என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Cambodia (கம்போடியா):

கம்போடியாவில் பணத்தை ரியல் (Riel) என்று மதிப்பிடுகின்றனர். ஒரு ரூபாய் என்பது 54 கம்போடியன் ரியலுக்கு சமமானதாம். கம்போடியா ஆசியாவில் இருக்கும் பழமையான ஒரு நாடு. இந்த நாடு பழமையான கலாசாரத்திற்கும், அழகிய கட்டடங்களுக்கும் பெயர் பெற்றது.

இலங்கை:

இந்தியாவில் ஒரு ரூபாய் இலங்கையில் 2.66 ரூபாய்க்கு சமம். இலங்கை நமது அண்டை நாடாகும், இங்கு புராதன கட்டடங்கள், இடங்களை கடந்து, டச்சு மருத்துவமனை, பெட்டா மார்க்கெட் ஷாப்பிங், கொழும்புவில் உள்ள ஆச்சர்யப்பட்ட வைக்கும் இடங்கள் என சுற்றிப்பார்க்க அதிக இடங்கள் இருக்கிறது. நேரம் இருந்தால் தவறாலம் பார்க்க வேண்டிய இடங்கள் உப்புவேலி, நிலவேலி. கடலோரத்தில் இருக்கும் சிறிய நகரங்களான இவை மிகவும் அழகானவை.

இந்தோனேஷியா:

Indonesia

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள நாடு இந்தோனேஷியா. அங்கு ருபியா என்று பணம் மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஒரு ரூபாய் என்பது இந்தோனேஷியாவில் 194 ரூபாய்க்கும் சமம். இந்தோனேசியாவில் சுற்றி பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் உள்ளன அவை என்னவென்றால் மணல் கடற்கரைகள், நெல் வயல்கள், ஏராளமான கோவில்கள், மசாஜ் சென்டர்கள் உங்களை வேறு உலகத்திற்கு கொண்டு செல்பவை.

லாவோஸ்:

ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடு லாவோஸ். மியான்மர், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து ஆகியவை அருகருகே இருக்கும் நாடுகள்.  இங்கு பணம் லாவோ கிப் என்று அழைக்கப்படுகிறது. ஒரு ரூபாய் 127 லாவோ கிப்-க்கு சமமானது. அதனால் தாராளமாக செலவு செய்யலாம்.

பராகுவே:

தென் அமெரிக்காவில் உள்ள நாடான பராகுவேவில் பணத்தை, பராகுயன் கவுரானி என்று மதிப்பிடுகின்றனர். நம்முடைய ஒரு ரூபாய் அவர்கள் நாட்டில் 85 ரூபாய்க்கு சமமானது. இந்தியாவில் இருந்து பராகுவே செல்ல விமான டிக்கெட் முன்கூட்டியே புக் செய்தால் குறைந்த விலையில் கிடைக்கும்.

கொலம்பியா:

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் பிராந்தியங்கள் சில வட அமெரிக்காவிலும் இருக்கின்றன. இங்கு பணம் கொலம்பியன் பெசோ என்று மதிப்பிடப்படுகிறது. ஒரு ரூபாய் 50 கொலம்பியன் பெசோவுக்கு ஈடானது.

ஜிம் பாம்பே:

இந்திய ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜிம்பாம்பே இடம்பெற்றுள்ளது. ஜிம்பாம்பே நாட்டில் பணம் டாலர் தான் என்றாலும் கூட பணவீக்கம் காரணமாக மதிப்பு மாறுபடுகிறது. அந்த வகையில் ஒரு ரூபாய் என்பது அங்கு 4 ரூபாய்க்கு சமம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement