நண்டு சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Crab Detail Information in Tamil

நம்மில் பலருக்கும் நண்டு என்பது மிகவும் பிடித்த ஒரு அசைவ உணவாக இருக்கும். ஆனால் அதனை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் நம்மில் பலரின் பதிலாக இருக்கும். அப்படி உங்களுக்கும் நண்டு பற்றி எந்த விவரங்களும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த பதிவில் நண்டு பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து நண்டு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து  கொள்ளுங்கள்.

Crab Information in Tamil:

Crab Information in Tamil

நண்டு நீர்நிலையில் வாழும் ஓர் உயிரினமாகும். இது நன்னீர் மற்றும் உப்பு நீர் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது. இது வாழும் நிலைக்கேற்ப பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இதில் சில இனங்கள் உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன. பொதுவாக நண்டுகள் மில்லி மீட்டர் (mm) அகலமான நண்டுகள் முதல் நான்கு மீட்டர் (m) அகலம் வரை வளரும் ஜாப்பனீஸ் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளில் காணப்படுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள் 👉👉 நண்டு எப்போது வாங்க வேண்டும் தெரியுமா

நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் 10 கால்களும் கொண்டவை. இவற்றில் முதல் இரண்டு கால்களை நண்டுகள் கவ்விகளாக பயன்படுத்துக் கொள்கின்றன. அதிலும் குறிப்பாக நண்டுகள் அவற்றின் ஓட்டினை ஆண்டுக்கு ஒரு முறை கழற்றி புதிப்பித்து கொள்ளும் தனி சிறப்பினை கொண்டுள்ளது.

மேலும் இவை கூட்டுக்கண்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. பெண் நண்டுகளின் வயிற்றுப்பகுதி ஆண் நண்டுகளின் வயிற்றுப்பகுதியை காட்டிலும் பார்க்க அகலமாக இருக்கும்.

இதற்கு காரணம் அவற்றின் வயிற்றின் கீழ் பகுதியிலேயே தம்முடைய முட்டைகளைக் பாதுகாத்து வைத்துள்ளன. நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். அதாவது கடல் உணவுகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக நண்டுகளே உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் டன்னுக்கும் அதிகமான நண்டுகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள் 👉👉 மண் சட்டி நண்டு ரசம் டேஸ்ட் சும்மா அள்ளும்

வகைகள்:

நண்டுகளில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. அவை,

  1. தேங்காய் நண்டு
  2. குளுவான் நண்டு
  3. நீலக்கால் நண்டு
  4. குதிரைலாட நண்டு ஆகியவை ஆகும்.

பயன்கள்:

நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை,

நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது.

நண்டு சாப்பிட்டால் முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதில் உள்ள வைட்டமின் பி கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது.

இதனை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவை குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள் 👉👉 அசத்தலான நண்டு குழம்பு செய்யலாம் வாங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement