Credit Card EMI Bill Early Benefits
இன்றைய கால கட்டத்தில் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கிரெடிட் கார்டு பலதரப்பு மக்களிடம் முக்கிய நிதி ஆதாரமாகவே மாறிவிட்டது. அனைத்து வங்கிகளும் போட்டி போட்டுகொண்டு கிரெடிட் கார்டுகளை தங்களது வாடிக்கையாளருக்கு வழங்குகின்றன. அப்படி வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கும் மக்கள் அதை சரியாக பயன்படுத்துகிறார்களா.? என்று கேட்டால் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலபேர் அதை பற்றி சரியாக தெரியாமலே பயன்படுத்தி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கும் போது சில விஷயங்களை நாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டு பிறகு தான் கடன் வாங்க வேண்டும். எனவே கடன் வாங்கும் போது கிரெடிட் கார்டு பற்றிய சில விவரங்ளை தெரிந்துகொள்ளவது முக்கியம். ஆனால் சிலர் அதை செய்வது இல்லை. அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டுக்கு முன்கூட்டியே EMI செலுத்துவதால் நீங்கள் என்ன பலன்களை அடைவீர்கள் என்று இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
EMI முன்கூட்டியே செலுத்துவதால் நீங்கள் பெரும் பலன்கள்:
நீங்கள் கிரெடிட் கார்டுக்கு EMIயை நிலுவைத் தேதிக்கு முன்பாகவே செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் உங்கள் நிதிநிலை சற்று ஆரோக்கியமாக நேர்மறையாக காணப்படும்.
உங்கள் கிரெடிட் ஸ்காரரை தீர்மானிப்பது நீங்கள் சரியான தேதிக்குள் உங்கள் தொகையை செலுத்துவதை பொறுத்து தான்.
கடன் பயன்பாட்டு விகிதம் குறையும்
உங்களின் கிரெடி கார்டில் உள்ள பேலன்ஸ் தொகைக்கும் உங்களின் கிரெடிட் வரம்புக்குமான விகிதமே கிரெடிட் பயன்பாடு ஆகும்.
நீங்கள் சீக்கிரமாக கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் போது, உங்களின் நிலுவைத் தொகையும் குறையும். இதன் காரணமாக உங்களின் கிரெடிட் பயன்பாடும் குறையும். கிரெடிட் பயன்பாடு விகிதம் குறைவாக இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.
வட்டி குறையும்
உங்கள் கிரெடிட் கார்ட் EMI யை சீக்கிரமாக செலுத்துவதால் உங்கள் நிலுவை தொகையின் வட்டிக்காலத்தை குறைக்கலாம், இதன் மூலம் உங்கள் வட்டி விகிதமும் குறையும். உங்களின் சேமிக்க முடியும்.
SBI -இல் Credit Card பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |