கோபம் வரும் போது அழுபவரா நீங்கள் ? ஏன் அழுகை வருகிறது ? அதற்கான தீர்வுதான் என்ன ?

Advertisement

கோபமா அழுகையா 

கோபம் என்பது நம்முடைய உணர்வுகளின் வடிகால் என்றும் கூறலாம். உணர்ச்சிகள்  உள்ள அனைவருக்குமே கோபம் வரும். கோபம் வராத மனிதன் இல்லவே இல்லை என்றும் கூறலாம். சிலர் அதை உடனே வெளிக்காட்டிவிடுவார்கள் அவர்களை உலகம்  கோபக்காரர்கள் என்கின்றது. அப்படி கோபம் ஏற்படுவதும் அதனை நமக்கு ஏதுவான முறையில் வெளிப்படுத்துவது மனித இயல்பு. அந்த வகையில் இன்று கோபம் வரும் அழுகை வரும். அதன் காரணம் என்ன ? அப்படி அழுகை வருவது நல்லதா அல்லது கெட்டதா என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோபம் வரும் போது அழுபவரா நீங்கள் ?

crying because of anger in tamil

கோபத்தை சிலர் உடனே கத்தி கூச்சலிட்டு வெளிப்படுத்திவிடுவார்கள்.வேறு சிலர் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் இருப்பதைப் போல் காட்டிக்கொள்வார்கள். அவர்களை சாது என்பார்கள். கோபக்காரர்களை விட சாதுக்களுக்கு வரும் கோபம் அதிகம். இதனால் தான் சாது மிரண்டால் காடு தாங்காது என்பார்கள்.

நம்மில் பெரும்பாலானோர் கோபம் வரும்போது அழுவதை பாத்திருப்போம். காரணம் அவருக்கு கோபம் இல்லை என்பது இல்லை அதை வெளிப்படுத்தும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது அறிந்தவர்களாக இருப்பார்கள். நாம் கோபம் கொள்வதால் எந்த மாற்றங்களும் வர போவதில்லை என்பதை உணர்ந்து, தங்களுக்கு அந்த இடத்தில் ஏற்பட்ட இழப்பை எண்ணி அழுபவரும் உண்டு.

நமது சுயமரியாதைக்கு இலக்கு வரும்போது ஏற்படுவது ஒரு வகை கோபம் என்றால், நமக்கு அநீதி இழக்கப்படும் போது, மன அழுத்தம் போன்றவற்றால் வருவது மற்றோரு வகை கோபம்.

கோபத்தில் அழுவார்கள் தங்களின் உணர்ச்சிகளை வலிகளை தங்களுக்குள்ளே போட்டு முடிகொள்பவர்கள்.

கோபத்தை வெளிக்காட்டிவிடுவதுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. கோபத்தை அடக்குவதால் அடக்குவதால் அது நம்முடைய இரத்த அழுத்தத்தை உயரும்.

கோவத்தில் அழுவதால் ஏற்படும் நன்மை:

கோபத்தில் அழும்போது மன அழுத்தம் குறைந்து ஒரு இறுக்கம் அற்ற சூழல் உருவதாக உணருவீர்கள்.

கோபத்தில் அதிகம் அடுத்தவர் புண்படும்படியாக வார்த்தைகள் வருவதை குறைக்கலாம்.

கோபத்தில் அழுதுவிடுவதால், நமது கோபம் சற்று தணியும் அதனால் உடல் ஆரோக்கிய தொல்லை ஏற்படாது.

கோவத்தில் அழுவதால் ஏற்படும் இழப்பு :

பொது இடங்களில் கோபத்தில் அழும்போது நாம் அவமானமாக உணருவோம்.

நம் மீதான மற்றவர்களின் பார்வை மாறுபடும். நம்மை பாவமாகவும் அழுமூஞ்சியாகவும் பார்ப்பார்கள்.

விவாதம் செய்து நமக்கு தேவையானதை அடைய தெரியாதவராக இருப்பார்கள்.

நியாயங்களை கேட்க தெரியாமல் உறவுகளுடன் இடைவெளி ஏற்படலாம்.

தீர்வு என்ன?

நாம் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் அழுகின்றோம் என்பதை கண்டுபிடித்து, அந்த சூழ்நிலைகளில் அந்த இடத்தை விட்டு நீங்குவது அல்லது அழுகையை கட்டுப்படுத்துவது நல்லது.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அதீத கோபம் யார் உடலுக்கும் மனதுக்கும் நல்லது அல்ல. எனவே கோபம் வரும் தருணத்திலேயே அதை கட்டுப்படுத்த வேண்டும் என உணர்ந்து சில விசயங்களை செய்யலாம்.

கோபத்தை கட்டுப்படுத்த :

கோபம் வரும்போது யோகா செய்ய வேண்டும்.

கோபத்தை தூண்டும் நபர்கள் இருக்கும் இடத்தில் இல்லாமல் இருப்பது நல்லது.

நாம் இருக்கும் சூழல் நமக்கு கோபத்தை வரவழைக்கும் என்றாலும் அந்த இடத்தில் இல்லாமல் இருப்பது நல்லது.

கோபம் வரும் போது கோவில் போன்ற அமைதியான இடங்களுக்கு செல்லலாம்.

கோபம் குறைக்க குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவழிக்கலாம்.

பாடல்கள் கேட்கலாம்.

மருத்தவ ஆலோசனை:

கோபம் வரும் பொழுது அழுகை வருவது தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறலாம்.

இந்த மாதிரியான சூழ்நிலை அடிக்கடி உருவாகும் போது நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கை படிப்படியாக குறையும். நமக்கு தேவையானதை கூட நம்மால் கேட்டு பெறமுடியாத சூழல் உருவாகலாம். அந்த சூழ்நிலையில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement