வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Curcuma Longa என்றால் என்ன.? அதன் அர்த்தம்

Updated On: March 19, 2024 1:16 PM
Follow Us:
curcuma longa in tamil
---Advertisement---
Advertisement

Curcuma Longa in Tamil

நாம் சாப்பிடும் பொருளாக இருந்தாலும் சரி, பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு நாம் சாப்பிடும் பொருளான அரிசிஅல்லது காய்கறியை எடுத்து கொள்வோம். அதில் என்னென்ன காய்கறி இருக்கிறது, இதனை எப்படி அறுவடை செய்கிறார்கள், எவ்வளவு நாளில் அறுவடை செய்யலாம் போன்ற எந்த தகவலையும் அறிந்து கொள்வதில்லை.

அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் நாம் பயன்படுத்தும் பொருட்களை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Curcuma Longa என்றால் என்ன.? அதன் அர்த்தம் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..

Curcuma Longa Meaning in Tamil: 

Curcuma Longa என்பது மஞ்சள் என்று பொருள்படுகிறது. Curcuma Longa தமிழ் பெயர் மஞ்சளாக இருக்கிறது.

Curcuma Longa என்றால் என்ன.?

Curcuma longa meaning in tamil

Curcuma Longa மஞ்சளாகும், இவை உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்கும், மருந்து பொருளாகவும் பயன்படுகிறது.

மஞ்சள் செடியானது ஒரு வகையான பூண்டு செடியாக இருக்கிறது. இந்த செடியானது 60 சென்டி மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை வளர கூடியவையாக இருக்கிறது. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். இந்த மஞ்சள் ஆனது முளையிலிருந்து முளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர் தான் மஞ்சள்.

இந்த மஞ்சள் ஆனது நறுமண பொருளாக இருக்கிறது. மேலும் இந்துக்கள் இதனை புனித பொருளாகவும் பார்க்கிறார்கள். மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது.தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் மஞ்சள் தயாரிப்பில் பெயர் பெற்றதாக இருக்கிறது.

மேலும் இந்த மஞ்சளானது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. அழகு குறிப்பிற்கு இந்த மஞ்சளானது உதவுகிறது. இதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைவதற்கு உதவுகிறது.

மஞ்சள் வகைகள்:

  • முட்டா மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • விரலி மஞ்சள்
  • கரிமஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரத்தின மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • குடமஞ்சள்
  • காட்டு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • மர மஞ்சள்
  • ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளை தமிழர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்:

  • தமிழர்களின் பண்பாட்டில் புத்தாடை அணியும் போது மஞ்சள் வைத்து அணியும் பழக்கம் இருக்கிறது.
  • அது போல கோவிலுக்கு பால் குடம் எடுப்பவர்கள் மீது மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றப்படுகிறது.
  • பொங்கல் அன்று பொங்கல் பானையில் கட்டுவதற்காக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. கன்னி பொங்கல் அன்று மஞ்சளில் விநாயகர் பிடித்து அருகம்புல் வைத்து வழிபடுகின்றார்கள். அன்றைய தினம் மஞ்சள் தண்ணீர் விளையாட்டு நடக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now