சைபர் கிரைம் புகார் கடிதம் எழுதுவது எப்படி

Advertisement

Cyber Crime Complaint Letter Format in Tamil

தொழிநுட்பம் வளர வளர நன்மைகள் அதிகரித்து வருவது போலவே அதனுடைய தீமைகளும்  வருகின்றது. சைபர் குற்றங்களை பொறுத்தவரை தற்போதைய காலகட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அனுமதியில்லாமல் படங்களை பகிர்வது, ஆன்லைன் பண திருட்டு, வேலைபெற்று தருவதாக ஏமாற்றுதல் என ஆன்லைன் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் நாம் பாதிக்கப்பட்டு காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டுமென்றால் கடிதம் எழுதி  வேண்டியிருக்கும். அதனை எப்படி எழுதுவது என்று தெரியாது. இந்த பதிவில் சைபர் கிரைம் புகார் கடிதம் எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

சைபர் கிரைம் புகார் கடிதம்:

அனுப்புநர்:

தங்கள் பெயர் மற்றும் உங்கள் வயது,
தகப்பனார் பெயர்
தங்கள் முகவரி
தொலைபேசி எண்:

பெறுநர்:

சம்பந்தப்பட்ட அதிகாரி,
சைபர் கிரைம் பிரிவு,
காவல் நிலைய முகவரி

மதிப்பிற்குரிய ஐயா/மேடம்,

எனது பெயர் பிரகாஷ் நான் இணைய மோசடிக்கு ஆளானேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவிக்கிறேன்.  25.02.2024 அன்று, பணத்தைத் திருப்பித் தருமாறு  நிறுவனத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது. பணத்தைத் திரும்பப்பெறும் செய்தியில் சேர்க்கப்பட்டுள்ள URL- ஐ கிளிக் செய்யும் போது, ​​எனது Chrome உலாவியில் பணத்தைத் திரும்பப்பெறும் படிவம் திறக்கப்பட்டது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தேன். படிவம் சமர்ப்பித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு, எனது வங்கிக் கணக்கிலிருந்து ரீபண்ட் பெறுவதற்குப் பதிலாக ரூ. 5000 கழிக்கப்பட்டது. நான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டேன.  நிறுவனத்திலிருந்து எனக்கு அப்படி எந்த செய்தியும் அனுப்பப்படவில்லை என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் நான் அதிர்ச்சியடைந்தேன், நான் ஏமாற்றப்பட்டேன் என்று நம்பினேன்.

எனவே, தயவுசெய்து எனது கோரிக்கையை பரிசீலித்து எனக்கு தேவையானதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். விசாரணையின் போது உங்களுக்குத் தேவையான அனைத்து ஸ்கிரீன் ஷாட்களையும் இணைத்துள்ளேன்.

நன்றி

உண்மையுள்ள,
பிரகாஷ்
தொடர்பு எண்
முகவரி
கையொப்பம்

காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

Advertisement