டெபிட் கார்டு பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள் | Debit Card Meaning in tamil

Debit Card Meaning in tamil

டெபிட் கார்டு என்றால் என்ன?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் டெபிட் கார்ட் பற்றி தான் பார்க்க போகிறோம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்கி இருப்பீர்கள் அதிகளவு மக்கள் அனைவரும் இந்த டெபிட் கார்ட் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் இன்னும் சிலர் டெபிட் கார்ட் என்றால் என்ன என்பது தெரியவில்லை அதன் பயன்கள் என்ன என்பதும் தெரியவில்லை.

இப்போதெல்லாம் வங்கிகளுக்கு சென்றால் அங்கு அதிகபட்சகமாக பணம் எடுப்பதற்கும் கட்டுவதற்கும் நிற்பது வயது முதியவர்கள் அல்லது டெபிட் கார்ட் பற்றி தெரியாதவர்கள் தான் அதிகளவு வரிசையில் நிற்கிறார்கள். காரணம் சின்ன சின்ன விஷயத்திற்கும் வங்கியை அனுகிறார்கள். அதாவது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு அதிகளவு நேரம் செலவு செய்கிறார்கள். வாங்க டெபிட் கார்ட் பற்றி தெரிந்துகொள்வோம்..!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு

Debit Card Meaning in Tamil:

டெபிட் கார்ட் என்பது பற்று அடடே என்று அர்த்தம் ஆகும். அதாவது நீங்கள் வங்கியில் வைத்துள்ள கணக்கில் உங்களுடைய பணத்தையோ அல்லது உங்களுக்கான சம்பளத்தையோ வங்கியில் செலுத்தினால் உங்களுடைய கணக்கில் சேர்ந்துவிடும். அந்த கணக்கில் உங்களுக்கு ATM வங்கியாளர்கள் உங்களுக்கு வழங்குவார்கள். ஆனால் இந்த டெபிட் கார்ட் என்பது பெரிய பெரிய ஆட்கள் மட்டுமே வைத்திருப்பார்கள் என்று பலருடைய கருத்து ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாக இருக்கிறது. இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டெபிட் கார்டுக்கு நிறைய பெயர்கள் உள்ளது அதனை தெரிந்துகொள்ளலாம். ATM card, Payment Card, Check Card, Bank Card, Money Access Card, Client Card, Key Card Cash Card பெயர்கள் உண்டு.

டெபிட் கார்டு என்பது ஒவ்வொரு பயனாளிகளின் விவரங்களின் அடிப்படையில் உருவாக்கபடுகிறது. சேமிப்பு கணக்குகொண்ட விவரங்களை மின் அஞ்சல் முறையில் பதியப்படுகிறது. அந்த கணக்கில் உள்ள பாதுகாப்பிற்காக ஒவ்வொரு கார்டுக்கு  ஒவ்வொரு ரகசிய பின் நம்பர் வழங்கப்படுகிறது. இந்த கார்டுக்கு நிறைய வகையான பயன்பாடுகள் உள்ளன. அதில் கொண்டு தான் காட்டின் தனித்தன்மையை அறிய முடியும். இப்போது  அதன் பெயர்களை பார்க்கலாம்.

  1. Visa Debit cards
  2. MasterCard debit cards
  3. Ru Pay Debit cards
  4. Contactless Debit cards
  5. Visa Electron Debit Cards
  6. Maestro Debit Card

இந்த ஒவ்வொரு கார்டுக்கு ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. இப்போது டெபிட் கார்டின் பயன்பாடு பற்றி பார்ப்போம்.

பற்று அட்டையை கொண்டு அதிக விரையில் பணமா எடுக்க முடிகிறது. நமது சேமிப்பு கணக்கிலிருந்து வங்கிகளுக்கு செல்லாமல் உடனடியாக பணம் எடுக்க வங்கிகள் வழங்கப்பட்ட ATM கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு உதவியாக உள்ளது.

வெளியூர்களுக்கு செல்லும் போது கையில் அதிகளவு பணத்தை எடுத்துச்செல்வதால் மக்களிடையே அதிக திருட்டுகள் நடைபெறுகிறது. மக்களின் நலனில் அக்கறைகொண்டு இந்த டெபிட் கார்டு உருவாக்கப்பட்டது.

பணபரிவர்தனையின் போது மின்னணு மூலம் பணம் செலுத்த இந்த டெபிட் கார்டு பயன்படுகிறது. இந்த கார்டுக்கு ATM கார்டில் உள்ள 16 இலக்கு எண்ணையும் டெபிட் கார்டில் உள்ள ரகசிய எண்ணையும் கொண்டு தான் பணம் செலுத்த முடியும்.

அதாவது நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை செலுத்தவேண்டும் என்றால் அதற்கு ATM கார்டில் உள்ள 16 இலக்கு எண்கள் மற்றும் டெபிட் கார்டில் உள்ள ரகசிய எண்களை கொடுத்தால் மட்டுமே பணத்தை செலுத்தமுடியும்.

இந்த கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு Reward points கொடுக்கப்படும். இந்த கார்டு தொலைந்தாலோ அல்லது உடைந்துவிட்டாலோ புதிய அட்டையை எளிதிலோ பெறமுடியும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் பொதுநலம்.com