செய்கூலி சேதாரம் என்றால் என்ன..? இது இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..!

Advertisement

செய்கூலி சேதாரம் என்றால் என்ன..? | Seikooli Setharam for Gold in Tamil

பொதுவாக நாம் தங்கம் வாங்க போனோம் என்றால் அங்கு அளவுகள் அனைத்தும் நமக்கு தெரியாது. அதனை தெரிந்து கொண்டால் அதனை பற்றி ஒவ்வொரு முறையும் முதலிருந்து தெரிந்துகொண்டு தான் சொல்ல முடியும். அதனை பற்றி அவ்வளவு நியாபகம் இருக்காது. மேலும் நம்மில் பலர் நகை கடைக்கு செல்வது மிகவும் குறைந்துவிட்டது அல்லவா..? ஆகவே அனைத்தும் நியாபகம் இருக்காது.

சரி நகை வாங்கும் இடத்திலும் சரி டிவி இரண்டிலும் சரி செய்கூலி இலவசம் சேதாரம் இலவசம் என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன என்று எப்போதாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்தால் அதற்கான விடையாக இந்த பதிவு இருக்கும்.

தங்கம் வாங்க போகிறீர்களா..! அப்போ இதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

செய்கூலி என்றால் என்ன?

 definition of lost wages in tamil

செய்கூலி என்றால் ஒரு மோதிரம் வாங்குகிறோம் என்றால் அந்த மோதிரத்தை ஒரு ஆள் மட்டும் செய்திருக்க மாட்டார்கள். அந்த மோதிரத்திற்கு பாலிஸ் போட ஒரு ஆள், கட்டிங் செய்ய ஒரு ஆள், மோதிரத்தை வடிவமைக்க ஒரு ஆள் என்று அதற்கு நிறைய ஆட்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் சேர்த்து உருவாக்கியதால் மட்டுமே இந்த மோதிரம் உருவாகி இருக்கும். அந்த வகையில் அவர்கள் அனைவருக்கும் கொடுக்கும் காசு தான் செய்கூலி ஆகும்.

சேதாரம் என்றால் என்ன?

சேதாரம் என்றால் ஒரு மோதிரத்தில் அளவு 2.1/2 கிராம் என்றால் அந்த மோதிரம் அனைத்தும் தங்கத்தால் ஆனதா என்றால் கிடையாது. 2 கிராம் மோதிரத்திற்கு குறைந்தபட்சம் 4 கிராம் தங்கம் தேவைப்படும்., அந்த 4 கிராம் இருந்தால் மட்டுமே இந்த 2 கிராம் மோதிரம் கிடைக்கும். அந்த வகையில் மீதி 2 கிராம் தங்கம் சேதாரம் ஆகிறது அல்லவா அதற்கு நாம் கொடுக்கும் காசு தான் சேதாரம் ஆகும்.

இதை தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement