Difference Between CV and Resume
இக்காலத்தில் உள்ள அனைவருக்கும் முக்கியமானதாகவும் பெரும்பாலான இடங்களில் தேவைப்படுவதாகவும் இருப்பது ரெசியூம் மற்றும் CV (கரிக்குலம் விட்டே). இவை இரண்டுமே தொழில் தேடுபவர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு முறை இன்டர்வியூக்கு செல்லும்போதும் இதனை ரெசியூம் அல்லது V (கரிக்குலம் விட்டே) இல்லாமல் செல்ல மாட்டார்கள். ஆனால் சிலருக்கு இதில் சந்தேகம் இருக்கும், இவை இரண்டுமே நமது கல்வி, திறன், வேலை அனுபவம் உள்ளிட்டவற்றை அளிப்பது தான். இருந்தாலும், CV மற்றும் Resume என்று தனித்தனி பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்று.? அதற்கான பதிலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
பொதுவாக சொல்லப்போனால் ரெசியூம் மற்றும் CV (கரிக்குலம் விட்டே) கிட்டத்தட்ட ஒரே முறையில் இருப்பது தான். இதற்கு வழங்கப்படும் பெயர் தான் வேறுபடுகிறது. வேலைக்கு செல்லும்போது ஒரு சில இடங்களில் ரெசியூம் கேட்பார்கள்.. இன்னும் ஒரு சில இடங்களில் CV (கரிக்குலம் விட்டே) கேட்பார்கள். இதிலே நமக்கு பல பல குழப்பங்கள் தோன்றும். எனவே, உங்கள் குழப்பங்களை தீர்க்கும் வகையில் இப்பதிவு அமையும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What is The Difference Between CV and Resume in Tamil:
What is Resume in Tamil:
ரெசியூம் என்பது வேலை தேடுபவர்கள் முக்கியமாக வைத்திருக்க கூடிய ஆவணம் ஆகும். இதில், ஒருவரது திறன், கல்வி தகுதி மற்றும் அவரின் வேலை அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தொகுப்பாகும். இதனை பெரும்பாலும் புதிதாக வேளைக்கு செல்பவர்கள் பயன்படுத்தக்கூடியது ஆகும். அதாவது, இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ரெசியூமில் உங்களது கல்வி திறன், தனித்திறன் மற்றும் வேலை அனுவபவம் உள்ளிட்டவற்றை ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில் குறிப்பிட்டுள்ள குறிப்பு ஆகும்.
NRE மற்றும் NRO இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
What is CV in Tamil:
CV (கரிக்குலம் விட்டே) என்பது ரெசியூமை போன்று வேலை தேடுபவர்கள் முக்கியமாக வைத்திருக்க கூடிய ஆவணம் ஆகும். ஆனால், இது ரெசியூமை போன்று இல்லாமல் சற்று விரிவாக இருக்கும். அதாவது, ஒருவரை பற்றிய கல்வி, வேலை, திறன் உள்ளிட்டவற்றை விரிவாக எழுதி இருக்கும். எனவே, ஒருவரை பற்றிய கல்வி திறன் உள்ளிட்ட குறிப்புகளை விரிவாக அதிகபட்சம்10 பக்கங்களுக்கு பதிவிடப்பட்டுள்ள ஆவணம் ஆகும்.
இதனை, ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அதிக வேலை அனுபவங்களை கொண்டிருப்பவர்கள் பயன்படுத்த கூடிய ஒன்று. இதனை பெரும்பாலும் ஐரோப்பியர்கள் பயன்படுத்துவார்கள். அங்கு வேலைக்கு செல்பவர்கள் முழுவதும் CV (கரிக்குலம் விட்டே) ஆவணத்தை தான் கொண்டு செல்வார்கள். ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் ரெசியூம் தான் பயன்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே CV (கரிக்குலம் விட்டே) பயன்படுகிறது.
Resume | CV |
Resume என்பது ஒருவரின் கல்வி திறன், வேலை திறன் உள்ளிட்ட விவரங்களை மேலோட்டமாக ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதுவது ஆகும். | CV என்பது ஒருவரின் கல்வி திறன், வேலை திறன் உள்ளிட்ட விவரங்களை விரிவாக குறைந்தபட்சம் மூன்று அல்லது நன்கு பக்கத்திற்கு எழுதும் முறை ஆகும். |
Climate Vs Weather இரண்டிற்கு உள்ள வேறுபாடுகள் தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |